இலங்கையில் அடையாளம் காணப்பட்ட முதலாவது குரங்கம்மை நோயாளி....
பல நாடுகளில் பரவலாகக் காணப்படும் குரங்கம்மை அறிகுறிகளுடன் கூடிய நோயாளி ஒருவர் முதன் முறையாக இலங்கையில் கண்டறியப்பட்டதாக மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் வைரஸ் பிரிவின் விசேட வைத்தியர் ஜுட் ஜயமஹா தெரிவித்துள்ளார்.
கடந்த முதலாம் திகதி டுபாயில் இருந்து இலங்கை வந்த 20 வயதுடைய இளைஞன் ஒருவரே இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளார். காய்ச்சல், தோலில் கொப்பளங்கள், வீங்கிய நிணநீர் முனைகள் போன்ற குரங்கம்மை நோய்க்கான அறிகுறிகளுடன் அவர் காணப்பட்டார். அவரது இரத்த மாதிரிகள் மூலம் அவருக்கு குரங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
உலக சுகாதார பிரிவின் ஆதாரங்களுக்கமைய, குரங்கம்மை ஒரு வைரஸ் நோயாகும். இது விலங்குகளிடமிருந்து, சுற்றுச்சூழலில் இருந்து மனிதர்களிடையே பரவுகிறது என்பதை ஆய்வுகள் மூலம் அறிய முடிகிறது
Comments
Post a Comment