சமுர்த்தி வங்கியில் கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மாருக்கான கணக்குகள்ஆரம்பிக்கும் பணி.......
தற்போது சமுர்த்தி வங்கி ஊடாக கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மாருக்கான 2500 ரூபாய் கொடுப்பணவு வழங்கப்படவுள்ளது. இதன் பொருட்டு சமுர்த்தி வங்கியில் கணக்குகளை ஆரம்பிக்காத பயனாளிகளை கணக்குகளை ஆரம்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டது. இதற்கமைய காத்தான்குடி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட காத்தான்குடி மற்றும் புதிய காத்தான்குடி சமுர்த்தி வங்கிகளில் கணக்குகள் ஆரம்பிக்கும் வேலைத்திட்டம் நடைபெற்றது. காத்தான்குடி பிரதேச செயலாளர் U.உதயசிறிதர் அவர்களின் பணிப்புரைக்கு அமைய அவரின் நேரடி பங்கு பற்றுதலுடன் இரு வங்கிகளிலும் கணக்குகள் திறக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
இதன் போது உதவி பிரதேச செயலாளர் சில்மியா, சமுர்த்தி தலைமையக முகாமையாளர் பத்மா ஜெயராஜா, மற்றும் சமுர்த்தி வங்கி முகாமையாளர்களான SH.முசம்மில், AL.ஸியாத் பஹ்மி மற்றும் வங்கி வெளிக்கள உத்தியோகத்தர்களின் பங்குபற்றுதலுடன் இடம் பெற்றது.
Comments
Post a Comment