போதைப் பொருள் பாவனைக்கெதிராக பாடசாலை மாணவரிடையே விழிப்புணர்வு கருத்தரங்கு.....
எம்மவர் மத்தியில் விரைவாக பாரியளவில் பரவிவரும் போதைப் பொருள் பாவனையினால், நம் சமூகத்திற்கு ஏற்படவிருக்கும் அபாயத்தினை உணர்த்தி எதிர்காலத்தில் அவற்றை குறைக்கும் நோக்கோடு மட்டக்களப்பு விமோட்சனா இல்லத்துடன் ஹெல்ப் எவர் அங்கத்தவர்கள் இணைந்து முதற்கட்டமாக மட்/புதுக்குடியிருப்பு கண்ணகி வித்தியாலய மாணவர்களுகிடையே விழிப்புணர்வு கருத்தரங்கை வெற்றிகரமாக நடாத்தி இருந்தது. இக்கருத்தரங்கில் மட்டக்களப்பு விமோச்சனா இல்லத்தின் ஸ்தாபகர் திருமதி.சகாதேவன் அவர்கள் கலந்து கொண்டு விளக்கவுரையை வழங்கி இருந்தார்.
Comments
Post a Comment