கடவுச்சீட்டு விநியோகம் மற்றும் சேவை கட்டணங்கள் அதிகரிப்பு.............
கடவுச்சீட்டு விநியோகம் மற்றும் அது தொடர்பான சேவைக் கட்டணங்கள் (17) முதல் அதிகரிக்கப்பட்டுள்ளது.
2023 வரவு செலவுத் திட்ட முன் மொழிவுகளுக்கு அமைய இவ்வாறு கடவுச்சீட்டு தொடர்பான கட்டணங்கள் இவ்வாறு அதிகரிக்கப்படவதாக, குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது. திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தலுக்கு அமைய
ஒரு நாள் சேவை விநியோக கட்டணம்: ரூ. 15,000 இலிருந்து ரூ. 20,000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது
சாதாரண சேவை விநியோக கட்டணம் ரூ. 3,500 இலிருந்து ரூ. 5,000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது
இதேவேளை, நவம்பர் 01 முதல் தேசிய அடையாள அட்டை சேவை கட்டணங்கள் 2 மடங்காக அதிகரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
புதிய கடவுச்சீட்டு கட்டணங்கள்
Comments
Post a Comment