மட்டு. மாவட்டத்தில் காணி தொடர்பான விழிப்புனர்வு கலந்துரையாடல்......
மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலகங்களில் பணியாற்றும் பிரதேச செயலாளர்கள், உதவி பிரதேச செயலாளர்கள், காணி வெளிக்கள உத்தியோகத்தர்கள் ஆகியோருக்கான விழிப்புனர்வு பயிற்சி கருத்தரங்கு இன்று (30) காலை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை கருணாகரன் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
காணி தொடர்பான புதிய நடைமுறைகள் மற்றும் அரச காணி தொடர்பான சட்டங்கள் மற்றும் சுற்று நிருபங்களின் அடிப்படையில் எவ்வாறு மக்களுக்கு வழிகாட்டல்களை தெளிவுபடுத்துவது காலத்திற்கு காலம் மாற்றியமைக்கப்படுகின்ற சட்டங்களையும் சுற்றுநிருபங்களையும் பின்பற்றி பணியினை ஆற்றுவது தொடர்பான கருத்துக்கள் வளவாளர்களினால் வளவான்மை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது
அரச காணி குத்தகை நடைமுறைகள் மற்றும் காணியற்றவர்களுக்கான காணி வழங்கல் நடைமுறைகள் பற்றிய விளக்கங்களும் சிறிய நடுத்தர பெரிய அளவிலான விவசாய மற்றும் கைத்தொழில் நடவடிக்கைகளுக்கான காணிகள் வழங்களில் நடைமுறையில் உள்ள சட்டத்திற்கு அப்பால் புதிய நடைமுறைகளும் பின்பற்றப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான விடயங்களும் கலந்துரையாடப்பட்டது.
இன் நிகழ்விற்கு வளவாளராக திருமதி கே.பி.ரி.பிறேமதாச காணி ஆணையாளர் மற்றும் ஏ.எச்.எம்.அன்சார் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி காணி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் திருமதி நவரூபரஞ்சனி முகுந்தன் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கிழக்கு மாகாண காணி திணைக்களத்தின் உதவி காணி ஆணையாளர் பு.ரவிராஜன் மட்டக்களப்பு காணி பிரிவின் காணி தலைமை உத்தியோகத்தர் திருமதி குகதா ஈஸ்வரன் செயலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment