வெட்டப்பட்டது மட்டக்களப்பு முகத்துவார ஆற்றுவாய் .......
மட்டக்களப்பு மாவட்டத்தில் பெய்து வரும் கன மழை காரணமாக தாழ்நிலங்களும் பெரும்போகத்துக்காக விதைக்கப்பட்டுள்ள பல வயல்களும் வெள்ளத்தில் மூழ்குவதாக முன்வைக்கப்பட்ட விண்ணப்பத்தை அடுத்து, மண்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட முகத்துவாரம் கடந்த (07) திகதி மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரின் வழிகாட்டுதலின் கீழ் வெட்டும் பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் மக்கள் பிரதிநிதிகளிடம் பொதுமக்களும் விவசாயிகளும் முன்வைத்த விண்ணப்பத்தை அடுத்து பிரதேச செயலகம், மாநகரசபை, நீர்ப்பாசனத் திணைக்களம்,உள்ளிட்ட பல அரச நிறுவனங்கள் ஒன்றிணைந்து இந்நடவடிக்கையை முன்னெடுத்துள்ளன.
மட்டக்களப்பு வாவியில் கலக்கும் மழைநீரினால் வெள்ளப்பெருக்கு எற்படுவதை தவிர்ப்பதுடன் மழை நீரினை கடலுக்கு வழிந்தோடச் செய்யும் வகையில் இதன்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வின் போது பாராளுமன்ற உறுப்பினர் கோ.கருணாகரம், முன்னால் மாகாண சபை உறுப்பினர் பூ.பிரசாந்தன், மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி.வாசுதேவன், நீர்ப்பாசன திணைக்கள பொறியியலாளர் என்.நாகரெட்ணம், மாநகரசபையின் பிரதி ஆணையாளர் உ.சிவராசா மற்றும் பல உயர் அதிகாரிகள், விவசாயிகள், மீனவர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டு ஆற்றுவாய் வெட்டும் பணிகளை முன்னெடுத்துவந்த நிலையில் இன்று (09) திகதி ஆற்றுவாய் வெட்டும் பணிகள் நிறைவிற்கு வந்துள்ளது.
Comments
Post a Comment