தீர்க்கப்படுமா இந்த பிரச்சனை............

தீர்க்கப்படுமா இந்த பிரச்சனை............

கடை கடையா தேடிவாங்கும் மானுடம், பயன்படுத்திய பின்பு அதை சேகரித்து குப்பைத்தொட்டியில் போட மறுக்குது ஏனோ????

இயற்கையாகவே எழில் கொஞ்சும் வளங்களைக் கொண்டது  மீன்பாடும் தேன் நாடு என்று அழைக்கப்படும் மட்டக்களப்பு நகரம்.  இந்த இடத்தில் தனிமையில் அமர்ந்து வாவியின் அழகினையும், புத்தம் புதிய தென்றலையும், ரசிக்கக் கூடிய ஒர் இடம். அத்தகைய எழில் கொஞ்சும் இடத்தில் இவ்வாறு குப்பைகளை வீதியில் எறிவது சரியா?

இவ்வாறு வீதிகளிலே குப்பைகளை வீசுவதன் மூலமாக பாதசாரிகள் மற்றும் வாவிக்கரையோரங்களை அண்டியுள்ள மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். 

1) சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் நீரோட்டத்திற்கு தடை ஏற்படுத்தும் வகையில் நீர்நிலை, கால்வாய்களில் குப்பை கொட்டினால் கைது செய்யவோ அல்லது தண்டப்பணம் செலுத்தவோ நடவடிக்கை எடுக்க வேண்டும்..!!

2) நீர்நிலைகளில் குப்பை கழிவுகளை கொட்டுவதால் தண்ணீர் மாசடையும் அபாயம் உள்ளது. இதன் மூலம் நிலத்தடி நீர் மாசடைந்து சுற்றுச்சூழல் பாதிக்கிறது. இதேபோல், மழைநீர் மற்றும் கழிவுநீர் கால்வாய்களில் குப்பை கழிவுகளை கொட்டுவதால் நீரோட்டம் தடைபட்டு, கொசு உற்பத்தி, துற்நாற்றம் வீசுகிறது. குறிப்பாக, மழைக்காலங்களில் மழைநீர் வெளியேற தடையாக உள்ளதுடன், மழைநீருடன் கழிவுநீர் கலந்து குடியிருப்புகளை சூழும் நிலை உள்ளது. எனவே, நீர்நிலைகள், கால்வாய்களில் பிளாஸ்டிக் குப்பை மற்றும் இதர திடக்கழிவுகளை கொட்டும் நபர்களின் மீது உடனடியாக நடவடிக்கை  மேற்கொள்ள வேண்டும். 

3) பொதுமக்கள் நீர்நிலைகள் மற்றும் கால்வாய் மற்றும் நீர்நிலைகளுக்கு அருகாமையில் குப்பை, பிளாஸ்டிக் மற்றும் திடக்கழிவுகளைக் கொட்டுவதைத் தவிர்த்து, தங்கள் இல்லங்களிலேயே குப்பைகளை உரிய முறையில் சேகரித்து தரம் பிரித்து மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களிடம் வழங்குங்கள்.

இன்றைய தினம் மாநகர சபை தூய்மை பணியாளர்களால் இவ்விடம் சுத்தம் செய்யப்பட்டது. 

தூய்மை பணியாளர்களின் சிரமத்தை உணர்ந்து குப்பைகளை குப்பைத்தொட்டியில் போடுங்கள்.

நன்றி : ஹெல் எவர் முகநூல் மையத்திற்கு.

Comments