மட்டு மாவட்ட செயலக சமுர்த்தி உத்தியோகத்தர்களுக்கான முன்னேற்ற மீளாய்வு கூட்டம்.....

மட்டு மாவட்ட செயலக சமுர்த்தி உத்தியோகத்தர்களுக்கான முன்னேற்ற மீளாய்வு கூட்டம்.....



மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் கடமையாற்றும் சமுர்த்தி முகாமையாளர்கள் மற்றும் சமுர்த்தி உத்தியோகத்தர்களுக்கான முன்னேற்ற மீளாய்வு கூட்டம் மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் S.புவனேந்திரன் தலைமையில் (14) அன்று மாவட்ட செயலகத்தின் மகாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

 இக் கூட்டத்திற்கு மாவட்ட செயலகத்தில் கடமையாற்றும் சமுர்த்தி முகாமையாளர்கள் மற்றும்  சமுர்த்தி உத்தியோகத்தர்களின் வேலைத்திட்டம் பற்றிய முன்னேற்ற மீளாய்வு கலந்துரையாடப்பட்டன. இதில் தாபன விடயம், கருத்திட்டம், நிதி,  வங்கிப்பிரிவு,  ஓய்வூதியம் போன்ற விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டன.

மட்டக்களப்பு மாவட்டத்தில்  செயற்படும் 31 சமுர்த்தி வங்கிகளின் ஊடாக உலக வங்கி வழங்கிய நிதியில் இருந்து மே, யூன், யூலை காலப்பகுதிக்கான முதியோர் கொடுப்பணவு, காத்திருப்பு கொடுப்பணவு, மாற்றுதிறனாளி கொடுப்பணவு, சிறுநீரக பாதிப்பிற்கான கொடுப்பணவுகளை மிக விரைவாகவும், நேர்த்தியாகவும் நிறைவுறுத்தியதுடன் அதற்காக சிறப்பாக செயற்பட்ட மாவட்ட செயலக சமுர்த்தி வங்கி பிரிவின் முகாமையாளர் நிர்மலாதேவி கிரிதராஜ் அவர்களுக்கும், அவருடன் பணியாற்றி உத்தியோகத்தர்களுக்கும் பாராட்டுக்களை பணிப்பாளர் தெரிவித்ததுடன்,  இனி வரும் காலங்களில் இதே போன்று சகல பிரிவுகளும் பணியாற்ற வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.  நம் சேவைகளை வழங்க தயாரhக வேண்டும் எனவும் குறிப்பிட்டார். 

இக் கூட்டத்தில் மாவட்ட சமுர்த்தி கணக்காளர் M.S.பஸீர் அவர்களும் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்க விடயமாகும்.









Comments