நுவரெலியாவில் மாணவர்களுக்கு இலவச தலைக்கவசம் விநியோகம்....

 நுவரெலியாவில் மாணவர்களுக்கு இலவச தலைக்கவசம் விநியோகம்....



'எமது பிள்ளைகள் பெறுமதியானவர்கள்' என்ற தொனிப்பொருளின் கீழ் நுவரெலியா பிரதேசத்தின் தமிழ், சிங்களப் பாடசாலைகளுக்கு தலைக்கவசம் இன்றி செல்லும் மாணவர்களின் பெயர் விபரங்களைத் திரட்டி மாணவர்களின் நலன் கருதியும், வீதி விபத்தில் பாடசாலை மாணவர்களின் உயிர்காக்கும் நோக்குடனும் அலியான்ஸ் காப்புறுதி நிறுவனம் மற்றும் பொலிஸாரின் ஆதரவுடன் தலைக்கவசத்தின் பயன்பாடு மற்றும் தலைக்கவசம் குறித்த விழிப்புணர்வுகளையும் மாணவர்களுக்கு வழங்கியது.

கடந்த (25) நுவரெலியா பொலிஸ் நிலையத்தின் கேட்போர் கூடத்தில் நுவரெலியா பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, பொலிஸ் போக்குவரத்துப் பிரிவு பொறுப்பதிகாரி இணைந்து மாணவர்களுக்கு இலவசமாக தலைக்கவசம் வழங்கினர். நாடளாவிய ரீதியில் சமூக வேலைத்திட்டமாக அலியான்ஸ் காப்புறுதி நிறுவனம் தலைக்கவசம் விநியோகம் செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.






Comments