மூன்றாம் நிலை தொழில் கல்வி மற்றும் தொழில் பயிற்சிக்காண மாவட்ட இணைப்பு குழு கூட்டம்!!
மட்டக்களப்பு மாவட்டத்தின் மூன்றாம் நிலை தொழில் கல்வி மற்றும் தொழில் பயிற்சிக்கான மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை கருணாகரன் தலைமையில் மாவட்ட செயலக மகாநாட்டு மண்டபத்தில் (16) திகதி இடம் பெற்றது.
மூன்றாம் நிலை தொழிற்கல்வி மற்றும் பயிற்சிக்கான செயற்பாடு மற்றும் ஒருங்கிணைப்பிக்கான 7 உப குழுக்களின் திட்ட முன் மொழிவுகள் சமர்ப்பிக்கப்பட்டதுடன், அத்திட்டங்கள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டது. இந் நிகழ்வின் போது மூன்றாம் நிலை தொழிற்கல்வி மற்றும் பயிற்சியின் போது எதிர்நோக்கும் பிரச்சினைகள் சவால்கள் தொடர்பாக விரிவாக கலந்தாலோசிக்கப்பட்டது .
இந் நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் நவரூபரஞ்ஜினி முகுந்தன் (காணி), பிரதி திட்டமிடல் பணிப்பாளர்கள், திறன் அபிவிருத்தி தொழில் வழிகாட்டல் திட்ட பணிப்பாளர் நிரோஷன் ஹப்புஆராச்சி, தொழில்நுட்ப கல்லுரியின் அதிபர், வலயக்கல்வி பணிப்பாளர்கள், பிரதி கல்வி பணிப்பாளர்கள், தொழில் பயிற்சி அதிகார சபையின் உயரதிகாரிகள், மாவட்ட திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர், மனிதவள அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment