மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்றுமதி உற்பத்தி அபிவிருத்தி வேலைத்திட்டம் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு ...............
மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்றுமதி உற்பத்தி அபிவிருத்தி வேலைத்திட்டம் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு ...............
தேசிய அருங்கலைகள் பேரவையின் எற்பாட்டில் ஏற்றுமதி சார்ந்த உற்பத்தி அபிவிருத்தி வேலைத்திட்டம் 2022/23 தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு மண்முனை வடக்கு பிரதேச செயலக டேபா மண்டபத்தில் தேசிய அருங்கலை பேரவையின் மாவட்ட உத்தியோகத்தர் தே.கிறிஷாந் தலைமையில் (18)ம் திகதி இடம்பெற்றது.
மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட கைப்பொருள் உற்பத்தியாளர்களின் உற்பத்தியினை சர்வதேச சந்தைக்கு ஏற்றுமதி செய்வதற்காக அவர்களை ஊக்குவிப்பதற்கும், வலுவூட்டுவதற்கான கருத்தரங்காக இவ் நிகழ்வு அமைந்திருந்தது.
சர்வதேச சந்தையில் எமது பாரம்பரியமான கண்கவர் கைவினைப் பொருட்களிற்கு சிறந்த சந்தை வாய்பு இருப்பதுடன், புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தரமான கைப்பொருள் உற்பத்தியை அதிகரிப்பதன் மூலம் சிறந்த சுயதொழில் வாய்ப்புக்கள் உருவாக்கப்படுவதனால் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் சிறந்த சந்தை வாய்ப்பை பெற்றுக் கொண்டு எமது நாட்டுக்கு அந்நிய செலவாணியை பெற்றுக்கொள்ள முடியும் என்பது தொடர்பாக இதன் போது விளக்கமளிக்கப்பட்டது.
இந் நிகழ்வில் தேசிய அருங்கலை பேரவையின் உதவி பணிப்பாளர்கள் எம்.ஐ.எம்.ரியாஸ் மற்றும் நிஷாந்த், கிராமிய கைத்தொழில் திணைக்களத்தின் உதவி பணிப்பாளர் இளங்குமரன், உதவி திட்டமிடல் பணிப்பாளர் A.சுதர்சன், தொழில் நுட்ப வளவாளரா தினித், விதாத வள நிலைய அதிகாரிகள், ஐ.டி.ஐ மற்றும் சேரமிக் நிறுவன அதிகாரிகள் என பலரும் இதன்போது கலந்து கொண்டுள்ளனர்.
Comments
Post a Comment