இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங், ட்ரீம் ஸ்பேஸ் அக்கடமிக்கு விஜயம்.....
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங் அன்மையில் மட்டக்களப்பிற்கு விஜயம் ஒன்றினை மேற்கொண்டு ட்ரீம் ஸ்பேஸ் அக்கடமியினை பார்வையிட்டுள்ளார்.
குறித்த நிகழ்வில் ட்ரீம் ஸ்பேஸ் அக்கடமியின் புத்தாக்க ரீதியான கற்றல் செயற்பாடுகள் மற்றும் எதிர்கால இலக்குகள் பற்றி அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங் இற்கு விளக்கமளிக்கப்பட்டது.
விஞ்ஞானம், பொறியியல், தொழிநுட்பம் மற்றும் கலைத்துறைகளில் மாற்றத்தை கொண்டுவர துறை சார்ந்த வல்லுனர்களை உருவாக்கும் சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க உதவிச்செயற்திட்டத்தின் கீழ் Global Communities ஊடாக செயல்படுத்தப்படும் 12 மாதகால செயற்திட்ட செயற்பாடுகளையும் அதில் அவர்கள் பயிற்றுவிக்கபடவிருக்கும் முறைமைகளையும் பார்வையிட்டார்.
குறித்த நிகழ்வில் Global Communities உடைய இலங்கைக்கான பிரதானி ஜெயதேவன் கார்த்திகேயன், பிராந்திய முகாமையாளர் சத்துரிக்கா செனவிரத்ன, திட்ட மேம்பாட்டு நிபுணர் நௌசாத் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இறுதியில் அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங் கருத்து தெரிவிக்கையில், நீங்கள் அனைவரும் மிகவும் உற்சாகத்தோடும், உயர்ந்த குறிக்கோள்களோடும் இவ்வாறான விடயங்களை செய்கின்றீர்கள். தொடர்ந்தும் இவ்வாறான சமூகத்திற்கும், உலகத்திற்கும் நன்மை தரக்கூடிய பல விடயங்களை செய்ய எனது மனப்பூர்வமான வாழ்த்துக்கள் எனவும், DreamSpace Academy இல் பல பெண்கள் ஆர்வத்தோடு வேலை செய்கின்றீர்கள். இவ்வாறே ஆண், பெண் என்ற பாலின வேறுபாடுகளை எல்லாம் ஒதுக்கி, ஒன்றாக வேலை செய்து சமூகத்தில் மாற்றத்தை உருவாக்குங்கள் எனவும் தெரிவித்தார்.
Comments
Post a Comment