மட்டு.புனித மிக்கேல் கல்லூரியில் மாணவர் பாராளுமன்ற தேர்தல்......

 மட்டு.புனித மிக்கேல் கல்லூரியில் மாணவர் பாராளுமன்ற தேர்தல்......


கல்வி அமைச்சின் புதிய சுற்று நிருபம் மற்றும் அறிவுறுத்தல் கோவையின் அடிப்படியில் மாணவர் பாராளுமன்ற தேர்தல் முறைமை பாடசாலை மட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. பாடசாலை மாணவர்களுக்கு சனநாயகம் அதன் பொறுப்புக்களும், சட்டத்தின் ஆதி பத்தியம், வாக்கு உரிமை, வாக்களித்தல் ஆகிவற்றின் முக்கியத்துவம் பற்றியும் செய்முறை அறிவை பெற்றுக்கொள்வதுடன் சனநாயக ஆட்சி முறைமை, வாழ்க்கை முறைமையே அனுபவங்களுடாக தெளிவுபடுத்தி கொள்வதற்கான சந்தர்ப்பத்தை மாணவர்களுக்கு வழங்கும் வகையில் வலயம், மாகாண மற்றும் தேசிய மட்டத்தில் உருவாக்கப்படும் மாணவர் பாராளுமன்றத்தின் அடிப்படை நோக்கமாக பாடசாலை மாணவர்கள் பல்வேறு அனுபவங்களை பெற்றுக்கொள்வதற்கான செயல்பாடாக தற்போது பாடசாலை மட்டத்தில் வலய மட்டத்தில், மற்றும் மாகாண மட்டத்தில் கல்வி அமைச்சின் புதிய சுற்று நிருபம் மற்றும் அறிவுறுத்தல் கோவையின் அடிப்படியில் மாணவர் பாராளுமன்ற தேர்தல் முறைமை நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 5 கல்வி வலயங்களில் 22 ஆம் ஆண்டுக்கான மாணவ பாராளுமன்ற தேர்தல் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் நிலையில் மட்டக்களப்பு கல்வி வலயத்தின் மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியில் கல்லூரி ஆசியர்களின் ஒழுங்கமைப்பு மற்றும் மேற்பார்வையின் கீழ் கல்லூரி அதிபர் பயஸ் ஆனந்தராஜா தலைமையில் மாணவர் பாராளுமன்ற தேர்தல் (01) நடைபெற்றது

Comments