குருக்கள்மடம் கலைவாணி மகா வித்தியாலய தேசியவாசிப்பு மாதமும், பரிசளிப்பு நிகழ்வும் ............
மட்டக்களப்பு குருக்கள்மடம் கலைவாணி மகா வித்தியாலயத்தில் தேசியவாசிப்பு மாதமும், பரிசளிப்பு நிகழ்வும் (01) அன்று வித்தியாலய அதிபர் யோகேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை தவிசாளர் ஞா.யோகநாதன் கலந்து கொண்டார். அத்துடன் பிரதேச சபை செயலாளர் அறிவழகன், உதவிக்கல்விப்பணிப்பாளர் நேசகஜேந்திரன் கலாபூசஷணம் திருநாவுக்கரசுஇ பாடசாலை அபிவிருத்திக்குழு செயலாளர் சத்திநாயகம் உட்பட் பலர் கலந்து கொண்டனர்.
இங்கு வாசிப்பு மாதத்தை முன்னிட்டு நடைபெற்ற போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கிவைக்கப்ட்டதுடன் கலை நிகழ்வுகளும் நடைபெற்றன.
Comments
Post a Comment