மாஞ்சோலை கிராம உத்தியோகத்தர் பிரிவில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை ....
கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட மாஞ்சோலை கிராம உத்தியோகத்தர் பிரிவில் டெங்கு நுளம்பு பரவக்கூடிய அபாயமுள்ள பொது இடங்களில் சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புக்களின் அங்கத்தவர்கள் ஒன்றிணைந்து ஒரே நேரத்தில் பாரிய சிரமதானப் பணியினை மேற்கொண்டுள்ளனர்.
இதன் போது, அல் ஹிரா வித்தியாலயம், அல் மினா வித்தியாலயம், மாஞ்சோலை ஜும்ஆ பள்ளிவாயல் மையவாடி, மாஞ்சோலை ஆயுர்வேத வைத்தியசாலை வளாகம் என்பன துப்பரவு செய்யப்பட்டுள்ளது.
இப் பிரிவிற்குப் பொறுப்பான சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எல்.எம்.நியாஸ் தலைமையில் இடம்பெற்ற குறித்த சிரமதானப் பணியில் பிரதேச செயலக சமுர்த்திப் பிரிவின் விடயப்பொறுப்பு உத்தியோகத்தரும் சமுர்த்தி சமூக அபிவிருத்தி உத்தியோகத்தருமான எம்.என்.எம்.சாஜஹான் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment