காத்தாரில் காற்பதிக்கும் வாழைச்சேனை அப்ஹான் முஹம்மத்....

 காத்தாரில் காற்பதிக்கும் வாழைச்சேனை அப்ஹான் முஹம்மத்....

(அஹமட் இர்ஷாத்)

வாழைச்சேனைச்சேர்ந்த இளம் விளையாட்டு வீரரான அப்ஹான் முஹம்மதை கத்தார் ஆசியன் கிரிக்கட் கழகம் (Qatar Asian Cricket Club) தனது அணியில் இணைத்துக் கொண்டுள்ளது.

18 வயதே நிரம்பிய அப்ஹான் முஹம்மது வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலையின் மாணவராவார்.

அத்துடன், நியூ ஸ்டார் விளையாட்டுக்கழகத்தின் கிரிக்கட் மற்றும் உதைப்பந்தாட்ட முக்கிய வீரர் என்பதுடன், இவரை கத்தாரில் இயங்கும் பிரபல கிரிக்கட் கழகமான Qatar Asian Cricket Clubல்  கடந்த மாதம் 30 ஆம் திகதி  உத்தியோகபூர்வமாக தனது அணியில் இணைத்துக் கொண்டுள்ளதுடன், வலைப்பயிற்சியிலும் ஈடுபட்டார்.

மேலும், இவ்வாறான அரிய வாய்ப்பினைப் பெற்றுள்ள அப்ஹான் தனது திறமையை வெளிக்காட்டி எதிர்காலத்தில் கத்தார் தேசிய அணியில் இடம்பிடிக்க கூடிய வாய்ப்புக்கள் அதிகமாக இருப்பதாகவே கத்தார் வாழ் கல்குடா கிரிக்கட் இரசிகர்கள் கருதுகின்றனர்.

அத்தோடு,பாடசாலை மட்டத்திலிருந்து மாவட்ட, மாகாண, தேசிய மட்டம் என இளம் வயதில் காற்பதித்து இன்று கடல் கடந்து சாதிக்கும் திறமையோடு தனது பயணத்தை ஆரம்பித்துள்ள அப்ஹான் முஹம்மது கல்குடாப் பிரேதேசத்தின் வாழைச்சேனை நியூ ஸ்டார் மற்றும் அல் அக்ஸா விளையாட்டுக் கழகங்களில் முக்கிய வீரனாகச் செயற்பட்ட முஹம்மத்தின் இரண்டாவது புதல்வர் என்பதும் குறிப்பிடத்தக்கது.



Comments