யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பெண் தலைமை தாங்கும் குடும்பங்களிற்கு வாழ்வாதார உதவிகள் வழங்கிவைப்பு!!
மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகமாக யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட ஏறாவூர்பற்று (செங்கலடி) பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் யுத்தத்தினால் பாதிப்புற்ற பெண் தலைமை தாங்கும் குடும்பங்களிற்கான வாழ்வாதார உதவிகள் (03) திகதி செங்கலடியில் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
இங்கையின் சமூக பொருளாதார நெருக்கடியின்போது GBV மற்றும் மனித விற்பனையால் பாதிக்கப்படக்கூடிய சமூகங்களில் இருந்து தப்பியவர்கள் உட்பட பெண்கள் மற்றும் சிறுமிகளின் பாதுகாப்பை உறுதி செய்தல் தொடர்பாக செயற்பட்டுவரும் புலம்பெயர்தலுக்கான சர்வதேச அமைப்பின் ஏற்பாட்டில் அதன் கிழக்கு மாகாண திட்ட ஒருங்கிணைப்பாளர் மயூரன் மேரி லெம்பட் தலைமையில் ஏறாவூர்பற்று பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
குறித்த நிறுவனத்தின் மனிதாபிமானத்திற்குரிய தேவைக்கான திட்டத்தின் ஊடாக முன்னெடுக்கப்பட்டுவரும் திட்டத்தின் ஊடாகவே தெரிவு செய்யப்பட்ட 262 பயனாளிகளுக்கு 40,000/= ரூபாய் பெறுமதியான உலருணவு பொருட் கொள்வனவிற்கான பவுச்சர்கள் பயனாளிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டது.
அவுஸ்திரேலியன் எய்ட் நிறுவனத்தின் நிதி உதவியின் கீழ் புலம்பெயர்தலுக்கான சர்வதேச அமைப்பின் ஊடக நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் இச்செயற்திட்டத்தின் குறித்த நிகழ்விற்கு பிரதம விருந்தினராக ஏறாவூர்பற்று பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் கே.தனபாலசுந்தரம் கலந்து கொண்டு பயனாளிகளுக்கான பவுச்சர்களை வழங்கி வைத்து நிகழ்வை சிறப்பித்ததுடன், குறித்த நிகழ்வில் ஏறாவூர்பற்று பிரதேச செயலகத்தின் உதவிப் பிரதேச செயலாளர் உள்ளிட்ட பிரதேச செயலக உத்தியோகத்தர்களும், புலம்பெயர்தலுக்கான சர்வதேச அமைப்பின் மாவட்ட அலுவலகத்தின் அலுவலகப் பொறுப்பாளர் மு.ஜெயராஜன் உள்ளிட்ட பலரும் கலந்து சிறப்பித்ததுடன் பயனாளிகளுக்கான பவுச்சர்களை வழங்கி வைத்தனர்.
Comments
Post a Comment