பாடசாலை மட்டத்தில் நஞ்சற்ற உணவு உற்பத்தி ஊக்குவிப்பு....
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியில் வீட்டுத்தோட்ட பயிர்செய்கையினை ஊக்குவிக்கும் வகையில் வீட்டுத்தோட்ட பயிச்செய்கை ஊக்குவிப்பு திட்டங்களை பாடசாலை மட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன
பாடசாலை மட்டத்தில் மாணவர்களின் கற்றல் செயல்பாட்டுடன், நஞ்சற்ற உணவு உற்பத்திகளை பயிர்செய்யும் வகையில் பாடசாலை ஆசிரியர்களுடன், பாடசாலை மாணவர்கள் இணைந்து பாடசாலை வளாகத்தில் நஞ்சற்ற விவசாய உணவு பயிர்செய்கையினை முன்னெடுத்து வருகின்றனர்.
மட்டக்களப்பு கல்வி வலயத்தின் மட்டக்களப்பு மயிலம்பாவெளி விக்னேஸ்வரா வித்தியாலய ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களினால் பாடசாலை வளாகத்தில் பயிரிடப்பட்ட நஞ்சற்ற உணவு உற்பத்திகளான கத்தரி, மிளகாய் போன்ற உணவு பயிர்களை அறுவடை செய்யும் நிகழ்வு பாடசாலை வளாகத்தில் இடம்பெற்றது
பாடசாலை அதிபர் கே.பாஸ்கரன் தலைமையில் இடம்பெற்ற அறுவடை நிகழ்வில் மட்டக்களப்பு கல்வி வலயக் கல்விப்பணிப்பாளர் சுஜாதா குலேந்திரகுமார் மற்றும் பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment