பெரிய கல்லாறு பொது நூலகமும் கல்வியூர் வாசகர் வட்டமும் பொதுமக்களும் இணைந்து நடாத்திய பரிசளிப்பு விழாவும், வாசகர் கௌரவிப்பு நிகழ்வும்!!
பெரிய கல்லாறு பொது நூலகமும் கல்வியூர் வாசகர் வட்டமும் பொதுமக்களும் இணைந்து நடாத்திய பரிசளிப்பு விழாவும், வாசகர் கௌரவிப்பு நிகழ்வும்!!
தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு பெரிய கல்லாறு பொது நூலகமும் கல்வியூர் வாசகர் வட்டமும் பொதுமக்களும் இணைந்து நடாத்திய பரிசளிப்பு விழாவும், வாசகர் கௌரவிப்பு நிகழ்வும் பெரிய கல்லாறு பொது நூலகத்தில் நடைபெற்றது.
இதன் போது மாணவர்களுக்கான பரிசில்கள் வழங்கப்பட்டதோடு மாணவர்களின் கலை நிகழ்வுகளும் நடைபெற்றன.
இதில் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் சி.பிரகாஸ் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை தவிசாளர் ஞா.யோகநாதன், பிரதேச சபை உறுப்பினர்களான ச.கணேசநாதன், மே.வினோராஜ், மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை செயலாளர் சா.அறிவழகன், சன சமூக நிலைய உத்தியோகத்தர் சி.குகனேசன் மற்றும் கிராமத்தின் பல முக்கியஸ்தர்கள்,மாதர் சங்க உறுப்பினர்கள், விளையாட்டு கழகங்களின் உறுப்பினர்கள், பாடசாலை அதிபர்கள் என பலரும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்துள்ளனர்.
Comments
Post a Comment