வவுணதீவு பிரதேச செயலகத்தில் போதைப்பொருள் பாவனை தடுப்பு குழு கூட்டம்..........
மட்டக்களப்பு மண்முனை மேற்கு பிரதேசத்தில் போதைப் பொருள் பாவனை தடுப்பு குழுவின் கூட்டம் வவுணதீவு பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் எஸ்.சுதாகர் தலைமையில் இடம் பெற்றது.
தேசிய ஒளடதங்கள் கட்டுப்பாட்டுக் சபையின் போதைப் பொருள் தடுப்பு உத்தியோகத்தர் ஒருங்கிணைப்பில் கூட்டம் ஆரம்பமானது. கிராமங்களில் சட்டவிரோத போதைப் பொருள் உற்பத்தி தொடர்பாகவும் மக்களிடையே அதிகரித்து வரும் போதைப் பொருள் பாவனை தொடர்பாகவும் இதன்போது பிரதானமாக ஆராயப்பட்டது.
இதன் போது, உதவி பிரதேச செயலாளர் சுபா சதாகரன் மற்றும் ஆயித்தியமலை, வவுணதீவு பொலிஸ் அதிகாரிகள், தாண்டியடி விசேட அதிரடிப்படை முகாம் உதவி பொறுப்பதிகாரி, மண்முனை மேற்கு பிரதே சுகாதார வைத்திய அலுவலக சுகாதார அதிகாரிகள், கோட்ட கல்வி பணிப்பாளர், மட்டக்களப்பு கலால் திணைக்கள அதிகாரிகள், கிராம அலுவலர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என பலர் இக்கூட்டத்தில் பிரசன்னமாயிருந்தனர்.
இதன்போது தற்போதய நடவடிக்க தொடர்பாகயும், எதிர்கால நடவடிக்கை தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
Comments
Post a Comment