காத்தான்குடியில் உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கான விற்பனை கண்காட்சி........

 காத்தான்குடியில் உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கான  விற்பனை கண்காட்சி........



மட்டக்களப்பு காத்தான்குடியில் உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கான பிரதேச மட்ட விற்பனை கண்காட்சி காத்தான்குடி அகமத் பரீத் மாவட்ட வீதியில் இடம் பெற்றது.

இந்த விற்பனை கண்காட்சியினை காத்தான்குடி பிரதேச செயலாளர் யு.உதய ஸ்ரீதர், உதவி பிரதேச செயலாளர்  எம்.எஸ்.சில்மியா ஆகியோர் ஆரம்பித்து வைத்தனர். காத்தான்குடி பிரதேச செயலக தொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு தொழில் முயற்சியாண்மை கண்காட்சியினை முன்னிட்டு பிரதேச மட்ட உற்பத்தியாளர்களுக்கான விற்பனை கண்காட்சி நடைபெற்றது

இந்த விற்பனை கண்காட்சியில் காத்தான்குடி பிரதேச செயலக பிரிவிலுள்ள உற்பத்தியாளர்களின் உற்பத்தி பொருட்கள் வைக்கப்பட்டிருந்தன. இந்த கண்காட்சியின் ஆரம்ப வைபவத்தில் காத்தான்குடி பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.தனுஜா உட்பட பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், சமுர்த்தி முகாமையாளர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், காத்தான்குடி பிரதேச செயலக முயற்சி அபிவிருத்தி பிரிவு உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.



Comments