ஆரையம்பதியில் தொற்றா நோய் தொடர்பான பரிசோதனை.............

 ஆரையம்பதியில் தொற்றா நோய் தொடர்பான பரிசோதனை.............



மட்டக்களப்பு ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலையினால் ஆரையம்பதி பிரதேசத்திலுள்ள கிராமங்கள் தோறும் தொற்றா நோய் தொடர்பான பரிசோதனை மற்;றும் விழிப்புனர்வு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலை பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் கௌரி சங்கர் தலைமையில் அவரின் மேற்பார்வையில் ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலை வைத்தியர்கள், தாதியர்கள், ஊழியர்களினால் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதில் ஒரு கட்டமாக கோவில்குளம் 156/C கிராம சேவையாளர் பிரிவிலுள்ள சிகரம் கிராமத்தில் தொற்றா நோய் தொடர்பான பரிசோதனை முகாம் (12) இடம் பெற்றது. சிகரம் முன்பள்ளி பாடசாலை மண்டபத்தில் இந்த பரிசோதனை நடைபெற்றது. இதன் போது பொது மக்களுக்கு இரத்த அழுத்தம், நீரிழிவு, கொலஸ்ரோல் போன்ற தொற்றா நோய் தொடர்பான பரிசோதனை இடம் பெற்றதுடன் இது தொடர்பான விழிப்புனர்வும் மேற்கொள்ளப்பட்டது.

தொற்றா நோயை தடுப்பதற்கான வேலைத்திட்டமாக இந்த பரிசோதனை முகாம் நடாத்தப்பட்டது.

Comments