மட்டக்களப்பு மாவட்ட பல் சமய ஒன்றிய சம்மேளனத்தின் வருடாந்த மீளாய்வு கூட்டம்....
மட்டக்களப்பு மாவட்ட பல் சமய ஒன்றியத்தின் நிர்வாக குழு மற்றும் மாவட்ட பல் சமய ஒன்றிய சம்மேளன வருடாந்த மீளாய்வு கூட்டம் (24) திகதி மட்டக்களப்பு சாள்ஸ் மண்டபத்தில் நடைபெற்றது.
மட்டக்களப்பு கரீத்தாஸ் எகெட் நிறுவனத்தின் இயக்குணர் அருட்பணி அழகுதுரை யேசுதாசன் அடிகளார் தலைமையில் நடைபெற்ற மட்டக்களப்பு பல்சமய ஒன்றியத்தின் நிர்வாக குழு மற்றும் மாவட்ட பல் சமய ஒன்றிய சம்மேளன வருடாந்த மீளாய்வு கூட்டத்தில் கடந்த கால செயற்பாடுகள் மற்றும் எதிர்கால செயற்பாடுகளின் திட்டமிடல்கள் தொடர்பாக இதன் போது விரிவாக கலந்துரையாடப்பட்டது.
கரித்தாஸ் எகெட் நிறுவனத்தின் சமாதான செயற்திட்ட இணைப்பாளர் இக்னேசியஸ் கிறிஸ்டியின் ஒழுங்கமைப்பில் நடைபெற்ற மீளாய்வு கூட்டத்தில் பல்சமய ஒன்றியத்தின் தலைவர் சிவஸ்ரீ.வீ.கே.சிவபாலன் குருக்கள்,பல்சமய ஒன்றியத்தின் செயலாளர் அருட்தந்தை கந்தையா ஜெகதாஸ் அடிகளார், பல்சமய ஒன்றியத்தின் உபதலைவர்களான ஹயாத்து மொகமட் சாஜஹான் மௌழவி மற்றும் அருட்பணி ஜோன் ஜோசப்மேரி அடிகளார், மட்டக்களப்பு மாவட்ட பல் சமய ஒன்றியத்தின் நிர்வாக குழு உறுப்பினர்கள், பிரதேச பல்சமய ஒன்றியங்களின் தலைவர்கள் உள்ளிட்ட நிருவாக உறுப்பினர்கள் என பலரும் கலந்துந்துகொண்டனர்.
சமயத் தலைவர்கள் ஊடகவியலாளர்கள், அரச உத்தியோகத்தர்களுக்கான ஆற்றல் விருத்தி செயலமர்வுகளை நடாத்தி அதன் ஊடாக சமூகத்தின் முன்னேற்றமும் சமூக மாண்பை மேம்படுத்தல் போன்ற பல செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றமை, தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு உலர் உணவு, மருத்துவ உதவிகள் வழங்கிவருகின்றமை, சமயத் தலைவர்களின் களப்பயணங்கள் ஊடாக மத நல்லிணக்க செயற்பாடுகளை மேம்படுத்தல் போன்ற விடயங்களை மட்டக்களப்பு மாவட்ட கரீத்தாஸ் எகெட் நிறுவனத்தினால் தொடர்ச்சியாக முன்னெடுத்துவருகின்றமை தொடர்பாக இதன்போது பல்சமய ஒன்றிய உறுப்பினர்களால் பாராட்டு தெரிவிக்கப்பட்டதுடன்இ நலிவுற்ற மக்களை தேடிச்சென்று எமது சமூகம் சார்ந்த பணியை தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட வேண்டியதன் அவசியம் தொடர்பாகவும் இதன் போது கருத்துக்கள் பரிமாரப்பட்டிருந்தது.
சர்வமத ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இடம்பெறவுள்ள ஒளிவிழா மற்றும் வருட இறுதி நிகழ்வு, பல்சமய கிராம மட்ட குழுக்களை புதிதாக உருவாக்குவது தொடர்பாகவும் திட்டமிடல் கலந்தாலோசனைகள் இடம்பெற்றதுடன் விசேடமாக இன்றைய தினம் மட்டக்களப்பு பல் சமய ஒன்றியத்தின் நிர்வாக குழு மற்றும் மாவட்ட பல் சமய ஒன்றிய சம்மேளன உறுப்பினர்களுக்காக விசேட செயலமர்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டு இடம்பெற்றதுடன், குறித்த செயலமர்வினை மட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலகத்தின் திறன் விருத்தி உத்தியோகத்தர் அழகையா ஜெகநாதன் நடாத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment