சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டது.......

 சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டது.......


ஏறாவூர்பற்று  பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட கரடியநாறு மற்றும் கோப்பாவெளி சமுர்த்தி  வலயத்திற்குபட்ட 11 கிராமசேவகர் பிரிவுகளில் சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புக்கள் மூலம் சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டது. ஏறாவூர்பற்று  பிரதேச செயலாளர் K.தனபாலசுந்தரம்  அவர்களின் வழிகாட்டலின் கீழ் இந்த சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

எதிர்வரும் காலங்களில் மழை பெய்யக் கூடிய வாய்ப்புக்களை கருத்தில் கொண்டு டெங்கு நுளம்பு பெருக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்குடனும் இப்பாரிய சிரமதான பணி முன்னெடுக்கப்பட்டுள்ள தாக ஏறாவூர் பற்று பிரதேச செயலக சமுர்த்தி தலைமையக முகாமையாளர் S.இராசலிங்கம் தெரிவித்துள்ளார்.

இச்சிரமதான பணிகளில் சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புக்களின் அங்கத்தவர்கள் ஒவ்வொரு கிராமம் ரீதியாக அக்கிராமங்களில் சிரமதான பணிகளில் ஈடுபட்டனர். 











Comments