மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியில் விழிப்புணர்வு செயற்பாடு.......

 மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியில் விழிப்புணர்வு செயற்பாடு.......


திண்மக்கழிவு முகாமைத்துவம் மற்றும் மீள்சுழற்சி தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியில் நடைபெற்றது. வன்னிக்கோப் நிறுவனத்தின் நிதி அனுசரணையில் மட்டக்களப்பு தீரணியம் திறந்த பாடசாலை பயிற்சி நிலையத்தினால் முன்னெடுத்து வரும் திண்மக்கழிவு முகாமைத்துவம் மற்றும் மீள்சுழற்சி தொடர்பான விழிப்புணர்வு செயல்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியில் பாடசாலை அதிபர் பயஸ் ஆனந்தராஜா தலைமையில் மாணவர்களுக்கான திண்மக்கழிவு முகாமைத்துவம் மற்றும் மீள்சுழற்சி தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு பாடசாலையில் நடாத்தப்பட்டது.

பாடசாலை சுகாதார கழக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் ஏற்பாட்டில் மாணவர்களுக்கான நடாத்தப்பட்ட விழிப்புணர்வு நிகழ்வில் மனித செயல்பாடுகளுக்கு தீங்கு விளைவிக்கும் உக்காத கழிவுகளை எவ்வாறு முகாமைத்துவம் செய்யப்பட்டு மீள்சுழற்சி செய்யப்பட வேண்டும் என்பது தொடர்பாக கருத்துக்கள் நிகழ்வில் கலந்து கொண்ட அதிதிகளினால் கருத்துரைகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் மத்திய சுற்றுசூழல் அதிகார சபையின் உதவி பணிப்பாளர் கோகுலன், சிரேஷ்ட விரிவுரையாளர் நுண்ணியல்துறை வைத்தியர் வைதேகி ரஜீவன், வாழைச்சேனை ஆதார வைத்தியசாலை உளநல வைத்தியர் ஜூடி ஜெயக்குமார், மட்டக்களப்பு தீரனியம் திறந்த பாடசாலை பயிற்சி நிலையத்தின் அதிபர் அருட்சகோதரர் மைக்கல், பாடசாலை பிரதி அதிபர், சுகாதார கழக ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்துகொண்டனர்

Comments