அரச உத்தியோகத்தர்களுக்கான பாடல் போட்டியின் இறுதி நிகழ்வுகள் திருமலையில் நடைபெற்றது.............

 அரச உத்தியோகத்தர்களுக்கான  பாடல் போட்டியின்  இறுதி நிகழ்வுகள் திருமலையில் நடைபெற்றது.............



கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தால் இரண்டாவது தடவையாக நாடாத்தப்பட்ட  அரச பதவி நிலை உத்தியோகத்தர்களுக்கான 2022ஆம் ஆண்டிற்கான இறுதி கட்ட பாடல் போட்டி (08) ம் திகதி அன்று திருகோணமலை கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள்  கலாசார மண்டபத்தில் கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் மாகாண பணிப்பாளர் சரன்யா சுதர்சன்  அவர்களின்  தலைமையில் நடைபெற்றது.

இப்போட்டியில் மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் கடமையாற்றும் பதவி நிலை உத்தியோகத்தர்கள் மற்றும் பதவி நிலை சாரா உத்தியோகத்தர்களில் இருந்து தெரிவு செய்யப்பட்ட போட்டியாளர்கள் இறுதிப் போட்டியில் பங்குபற்றி இருந்தனர். மாவட்ட மட்டங்களில் வெற்றியூட்டிய போட்டியாளர்களுக்கு சான்றிதழ்களும் வெற்றிக் கேடயங்களும் மாகாண மட்டத்தில் வெற்றி பெறும் முதல் மூன்று  போட்டியாளர்களுக்கு சான்றிதழ்களும்,   பணப்பரிசிலும், வெற்றிக்கிண்ணமும் வழங்கப்படவுள்ளதாகவும், இவர்களுக்கான விருது வழங்கும் நிகழ்வானது 2022ம் ஆண்டுக்கான இலக்கிய விழா நிகழ்வின் போது வழங்கப்படவுள்ளதாக மாகாண பணிப்பாளர் சரன்யா சுதர்சன் தெரிவித்தார்.

 இந்நிகழ்வில் கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் பிரதம கணக்காளரும்  மற்றும் கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் கணக்காளருமான எஸ்.நேசராஜா அவர்கள் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்க விடயமாகும்.












Comments