அகில இலங்கை ரீதியில் மல்யுத்தப்போட்டியில் வெற்றிபெற்ற மாணவனை கௌரவிக்கும் நிகழ்வு......
அகில இலங்கை ரீதியில் பாடசாலை மட்டத்தில் நடாத்தப்பட்ட மல்யுத்தப்போட்டியில் வெற்றி பெற்ற மட்டக்களப்பு இந்து கல்லூரி மாணவனை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு பாடசாலையில் நடைபெற்றது.
2022 ஆம் ஆண்டுக்கான அகில இலங்கை ரீதியில் பாடசாலைகளுக்கிடையில் நடாத்தப்பட்ட மல்யுத்தப்போட்டியில் கலந்துகொண்ட இந்து கல்லூரி மாணவன் விமலேந்திரன் ஹரிகரன் மூன்றாம் இடத்தினை பெற்று கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளான். கல்லூரிக்கு பெருமை சேர்த்த மாணவனையும் பயிற்றுவித்த ஆசிரியரையும் பாராட்டி பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்
கல்லூரி அதிபர் சண்டேஸ்வர் சர்மா தலைமையில் கல்லூரி ஆசிரியர்கள், மாணவர்கள் பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்களின் இணைந்த ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்வில் உடற்கல்வி உதவிக்கல்விப்பணிப்பாளர் வி.லவகுமார், கல்லூரி ஆசிரியர்கள், மாணவர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், பாடசாலை பழைய மாணவர்கள் என பலர் கலந்து சிறப்பித்தனர்
Comments
Post a Comment