அன்று சொன்னதை இன்று நிறைவேற்றிய மட்டு மேயர் பாராட்டுக்கள்...... வணபிதா வெபர் அடிகளாரின் உருவ சிலை வெபர் மைதானத்தில்.....
அன்று சொன்னதை இன்று நிறைவேற்றிய மட்டு மேயர் பாராட்டுக்கள்...... வணபிதா வெபர் அடிகளாரின் உருவ சிலை வெபர் மைதானத்தில்.....
இற்றைக்கு சுமார் 3 வருடங்களுக்கு முன் மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் வணபிதா வெபர் அடிகளாரின் உருவச்சிலை ஸ்தாபிக்கப்படும் என மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவான் அன்று ஒரு நிகழ்வின் போது தெரிவித்திருந்தார், இதை இன்று செய்து முடித்துள்ளார். அவருக்கு எமது பாராட்டுக்கள் அன்று எம்மால் வெளியிடப்பட்ட கட்டுரை தங்கள் பார்வைக்காக.....
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள வெபர் மைதானத்தில் வணபிதா வெபர் அடிகளாரின் உருவச்சிலை மிகவிரைவில் ஸ்தாபிக்கப்படும் என மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவான் பாடுமீன் சமர் என வர்ணிக்கப்படும் வின்சன்ட் உயர்தர பாடசாலைக்கும், சிசிலியா பெண்கள் பாடசாலைக்கும் இடையில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் தெரிவித்தார்.
மாநகர முதல்வர் தி.சரவணபவான் உரையாற்றுகையில் மட்டக்களப்பில் ஒரு மைதானத்தை அமைத்து அதன் மூலம் மிக சிறந்த வீரர்களை மட்டக்களப்பில் உருவாக்கிய பெருமை வணபிதா வெபர் அடிகளாருக்கு சாரும். வெபர் அடிகளார் தான் இறந்தால் தன்னை வெபர் மைதானத்தில் புதைக்க வேண்டும் என்றும் அதன் மேல் வீரர்கள் ஓடி, ஆடி விளையாட வேண்டும் என கோரிக்கை விடுத்ததாகவும், இது நிறைவேறாத காராணத்தால் அவரின் உருவ சிலையை இம்மைதானத்தில் அமைத்து, அவர் இவ்வீரர்கள் விளையாடுவதை பார்த்த வண்ணம் இருக்கவே, இம்மமைதானத்தில் அவரின் சிலையை மிக விரைவில் ஸ்தாபிக்கவுள்ளதாக மாநகர முதல்வர் தி.சரவணபவான் தெரிவித்தார்.
அருட்தந்தை வெபர் அடிகளார் 1914.02.21ம் திகதி அமெரிக்காவின் நியூஓலியன்ஸ் மாநிலத்தில் பிறந்தார். 1945ம் ஆண்டு மட்டக்களப்புக்கு வருகை தந்த இவர் 1998 ஏப்ரல் மாதம் மட்டக்களப்பிலேயே மரணமடைந்தார்.
இவரின் உருவ சிலையை ஸ்தாபிப்பதை பாராட்டுகின்றோம், அத்துடன் அவரின் அரிய புகைப்படங்கள், அவர் மூலம் இனம் காணப்பட்ட வீரர்களின் புகைப்படங்கள், இம்மைதானத்தின் அரிய பழைய புகைப்படங்கள், வெற்றி கனிகளை சுவைத்த கிண்ணங்கள் என்பனவற்றையும் சேகரித்து வைத்து ஒரு அருங்காட்சியகத்தை உருவாக்கினால் மிகச்சிறப்பாக இருக்கும் இதையும் பரிசீலனை செய்யுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
Comments
Post a Comment