வாகன விபத்து....
வவுனியா, கனகராயன்குளம் பகுதியில் இன்று (24) அதிகாலை பேருந்து - டிப்பர் மோதிக்கொண்ட விபத்தில் டிப்பர் சாரதி மற்றும் பேருந்தில் பயணித்த பயணிகள் உட்பட பத்திற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்து வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று (24) அதிகாலை 5.30 மணியளவில் இடம்பெற்ற இவ்விபத்துச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, தங்காலையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற பஸ் ஒன்றும் மாங்குளத்திலிருந்து கனகராயன்குளம் நோக்கி சென்ற டிப்பரும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
Comments
Post a Comment