மத சகவாழ்வுக்கான முன்னெடுப்பு செயலமர்வு...
மத சகவாழ்வுக்கான முன்னெடுப்பு தொடர்பான செயலமர்வு (03) மட்டக்களப்பு தன்னாமுனை மினானி நகரில் நடைபெற்றது. தேசிய சமாதான பேரவையுடன், மட்டக்களப்பு வண்ணாத்திப்பூச்சி சமாதான பூங்கா இனணந்து மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுத்துள்ள பல் சமய தலைவர்களுடான இன ஐக்கிய செயல்திட்டத்தின் 'மத சகவாழ்வுக்கான முன்னெடுப்பு'எனும் செயற்திட்டத்தின் கீழ் பிரதேச சர்வ சமயக் குழுக்களின் பங்களிப்பு வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது
அதன் ஒரு செயல்பாடாக மட்டக்களப்பு பிரதேச சர்வ சமயக் குழுவின் பங்குபற்றுதலுடன் தற்போதைய பொருளாதார, அரசியல் நெருக்கடியான சூழ்நிலையில் புதிய அரசியல் கலாசார மாற்றம், இனங்களுக்கிடையில் தீர்க்கப்படாத முரண்பாடுகள் போன்ற சமூக மட்ட கட்டமைப்பை உருவாக்கும் நோக்காக கொண்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய செயல் திட்டம் தொடர்பான செயலமர்வு நடைபெற்றது.
இலங்கை தேசிய சமாதனப் பேரவையின் அனுசரணையில் மட்டக்களப்பு வண்ணாத்திப்பூச்சி சமாதான பூங்காவின் திட்டமுகாமையாளர் டி.இநகுலேஸ்வரன் ஒழுங்கமைப்பில் இலங்கை தேசிய சமாதனப் பேரவையின் தேசிய இணைப்பாளர் எம்.உவைஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு பிரதேச சர்வமத இளைஞர் யுவதிகளுக்கான ஆரம்ப கட்ட செயலமர்வில் சர்வமத தலைவர்கள், சமூக பாதுகாப்பு குழு பிரதிநிதிகள், கிராம சேவை உத்தியோகத்தர்கள், அரச திணைக்கள உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்
Comments
Post a Comment