அரசாங்க அதிபர் வெற்றி கிண்ணத்தை சுவீகரித்த மாவட்ட செயலக அணிக்கு அரசாங்க அதிபர் பாராட்டு......
அரச உத்தியோகத்தர்களின் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கில் 14 பிரதேச செயலகங்களுக்கிடையில் நடத்தப்பட்ட வெற்றி கிண்ண மென்பந்து கிறிக்கட் சுற்றுப்போட்டியில் மட்டக்களப்பு மாவட்ட செயலக அணி வெற்றிக்கிண்ணத்தினை சுவீகரித்தமையினை மற்றும் எல்லே போட்டியில் இரண்டாம் இடம் பெற்றதை முன்னிட்டு மாவட்ட செயலக அணியின் விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வொன்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் (30) நடைபெற்றது.
மாவட்ட செயலாளரும் அரசாங்க அதிபருமாகிய கே.கருணாகரன் அவர்களது தலைமையில் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற குறித்த நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்களான சுதர்சினி ஸ்ரீகாந்த், நவரூபரஞ்ஜனி முகுந்தன், பிரதம கணக்காளர் இந்திராவதி மோகன், செயலக கணக்காளர் எம்.வினோத் மாவட்ட செயலக நிருவாக உத்தியோகத்தர் கே.தயாபரன், மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் வி.ஈஸ்பரன் உள்ளிட்ட மாவட்ட செயலக உயரதிகாரிகளும் கலந்து கொண்டு மாவட்ட செயலக அணியினரை வாழ்த்தினர்.
Comments
Post a Comment