விலை திருத்தம் குறித்து நாளை மறுதினம் அறிவிக்கப்படும் – முதித பீரிஸ்!

 விலை திருத்தம் குறித்து நாளை மறுதினம் அறிவிக்கப்படும் – முதித பீரிஸ்!



எரிவாயு விலை திருத்தம் குறித்து நாளை மறுதினம் அறிவிக்கப்படும் என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (04) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அவர், தனது நிறுவனத்தில் போதுமான அளவு எரிவாயு கையிருப்பு உள்ளதாக தெரிவித்துள்ளார்.

விலை குறையும் என வெளியாகும் செய்திகளை கருத்திற்கொண்டு விற்பனை முகவர்கள் கையிருப்புக்கான முன்பதிவுகளை தாமதப்படுத்துவதால் சந்தையில் தற்போது எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் காலங்களில் மீண்டும் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படாது என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.



Comments