மாற்றுத்திறனாளிகளுக்கான உதவிக்கொடுப்பனவுத்திட்ட அங்குரார்ப்பண நிகழ்வு............

 மாற்றுத்திறனாளிகளுக்கான உதவிக்கொடுப்பனவுத்திட்ட அங்குரார்ப்பண நிகழ்வு........



'ஒவ்வொருவரையும் கவனித்துக்கொள்வோம்' எனும் தொனிப்பொருளிற்கு அமைவாக பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள், வயோதிபர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கான உதவித்திட்டம் வழங்கும் நிகழ்வு  (16)ம் திகதி மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.

தற்பொழுது நாடு எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடியான சூழலில் குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள தெரிவு செய்யப்பட்ட 8 பிரதேச செயலக பிரிவுகளிலுள்ள இதுவரை அரச கொடுப்பனவிற்காக காத்திருப்பு பட்டியலிலுள்ள மாற்றுத்திறனாளிகள், வயோதிபர்கள் மற்றும் அவர்களது குடும்பங்கள் பயன்பெறும் வகையிலான உதவித்திட்டமானது CBM (christian blind mission) நிறுவனத்தின் நிதிப் பங்களிப்புடன் இந் நிறுவனத்தின் பங்களாளர் நிறுவனங்களான CAMID, PPCC மற்றும் YMCA ஊடாக மாவட்ட செயலகத்துடன் இணைந்து 3000 பயனாளிகளுக்காக தலா 5000/= கொடுப்பனவானது மண்முனை வடக்கு, ஏறாவூர் பற்று, ஏறாவூர் நகரம், கோறளைப்பற்று மத்தி, கோரளைப்பற்று மேற்கு, மண்முனை மேற்கு, காத்தான்குடி மற்றும் போரதீவு பற்று பிரதேச செயலக பிரிவுகளிலுள்ள தெரிவு செய்யப்பட்ட 3000 மாற்றுத்திறனாளிகள், வயோதிபர்களுக்கு மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு வழங்கி வைக்கப்படவுள்ளது.

இதன் ஆரம்ப நிகழ்வாக மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட 30 மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் தலைமையில் இவர்களுக்கான காசுக்கட்டளைகள் (16) மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில்  வழங்கி வைக்கப்பட்டது. 

இந் நிகழ்வுக்கு அதிதிகளாக CBM நிறுவனத்தின் இலங்கைக்கான பிரதிநிதி வாணி சுரேந்திரநாதன், மண்முனை வடக்கு உதவி பிரதேச செயலாளர் லட்சண்யா பிரசந்தன், CAMID திட்டப்பணிப்பாளர் கே.காண்டீபன், PPCC நிறுவன இயக்குனர் அருட்தந்தை போல் சற்குணநாயகம் அடிகளார் மற்றும் YMCA செயலாளர் பற்றிக், மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் சா.அருள்மொழி, மண்முனை வடக்கு பிரதேச செயலக சமூக சேவைகள் உத்தியோகத்தர் ராஜ்மோகன், மண்முனை வடக்கு பிரதேச செயலக கிராம உத்தியோகத்தர்களுக்கான நிருவாக உத்தியோகத்தர் கே.ராஜன் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், எதிர்நீச்சல் மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.









Comments