எரிபொருள் விலை குறைக்கப்பட்டாலும் பேருந்து கட்டணத்தில் எவ்வித மாற்றங்களையும் மேற்கொள்ளமுடியாது - கெமுனு விஜயரத்ன

 எரிபொருள் விலை குறைக்கப்பட்டாலும் பேருந்து கட்டணத்தில் எவ்வித மாற்றங்களையும் மேற்கொள்ளமுடியாது - கெமுனு விஜயரத்ன

எரிபொருள் கட்டணம் தொடர்ச்சியாக குறைக்கப்பட்டாலும் பயணிகளுக்கான பேருந்து கட்டணத்தில் எவ்வித மாற்றங்களையும் மேற் கொள்ள முடியாது என அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜயரத்ன தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்று தீவிரமடைந்த காலத்தில் ஆசன எண்ணிக்கைக்கு மாத்திரம் பயணிகளை ஏற்றிச்செல்லுமாறு சுகாதார அமைச்சு கட்டுபாட்டினை விதித்து வழிகாட்டல் கோவையையும் வெளியிட்டிருந்தது. இந்நிலையில், தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் அனுமதியுடன் பயணிகளுக்கான பேருந்து கட்டணம் அதிகரிக்கப்பட்டது. எனினும் குறித்த விதிமுறைகள் நீக்கப்பட்டால் பேருந்து கட்டணம் குறைக்கப்படும் என அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜயரத்ன தெரிவித்திருந்தார்.

ஆனபோதும் கொரோனா விதிமுறைகள் அகற்றப்பட்டாலும், எரிபொருள் விலை குறைக்கப்பட்டாலும் பேருந்து கட்டணத்தை குறைக்க முடியாது என தற்போது கெமுனு விஜயரத்ன தெரிவித்துள்ளார். பேருந்துகளுக்கான உதிரிப்பாகங்களின் விலை மும்மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது. வரிவிதிப்பு பாரிய அளவில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நீர் மற்றும் மின்சார கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைக்க முடியாத நிலையில் உணவக உரிமையாளர்கள் தொழிலை முன்னெடுக்கின்றனர்.

Comments