சாப்பிட முடியாது, தூங்க முடியாது, மனைவியும் போய்ட்டாங்க. போதைப்பழக்கம் குறித்து மனம்திறந்த – வாசிம் அக்ரம்.......
சாப்பிட முடியாது, தூங்க முடியாது, மனைவியும் போய்ட்டாங்க. போதைப்பழக்கம் குறித்து மனம்திறந்த – வாசிம் அக்ரம்.......
பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனும், ஜாம்பவானுமான வாசிம் அக்ரம் பாகிஸ்தான் அணிக்காக கடந்த 1984 ஆம் ஆண்டு முதல் 2003ஆம் ஆண்டு வரை சர்வதேச கிரிக்கெட்டில் 104 டெஸ்ட் போட்டிகளிலும், 356 ஒரு நாள் போட்டிகளிலும் விளையாடியுள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் 916 விக்கெட்டுகளை வீழ்த்திய வாசிம் அக்ரம் இன்றளவும் பாகிஸ்தான் அணியின் ஒரு மிகப்பெரிய லெஜென்டாக பார்க்கப்படுகிறார். தற்போது 56 வயதான அவர் தொடர்ந்து கிரிக்கெட் தொடர்பான பணிகளிலேயே ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் தற்போது ” Sultan A Memoir ” என்கிற பெயரில் தனது வாழ்க்கை குறித்த சுயசரிதை நூலை வெளியிட இருக்கிறார். அந்த சுயசரிதையில் வாசிம் அக்ரம் குறிப்பிட்டுள்ள சில கருத்துக்கள் தற்போது இணையத்தில் கசிந்துள்ளன.
அந்த வகையில் அவர் போதை பழக்கத்திற்கு அடிமையாக இருந்ததாகவும், அதனால் தன் வாழ்வில் ஏற்பட்ட கஷ்டங்களையும் அவர் வெளிப்படையாக அந்த புத்தகத்தில் பகிர்ந்துள்ளார். அதன்படி அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு மெல்ல மெல்ல என் வாழ்வில் போதைப் பழக்கம் நுழைந்தது. இங்கிலாந்தில் ஒரு முறை பார்ட்டிக்கு சென்ற போது என்னுடைய நண்பர்கள் கோகையினை எனக்கு அறிமுகப்படுத்தினார்கள். அதன் பிறகு நாளுக்கு நாள் நான் அதை பயன்படுத்துவதை அதிகரித்தேன். அதன் காரணமாக எனக்கும் என் மனைவிக்கும் இடையே பிரச்சனையும் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் எனது மனைவி என்னிடம் இருந்து பிரிந்து கராச்சிக்கு சென்று பெற்றோருடன் வாழ விரும்புகிறேன் என்று கூட சொல்லிவிட்டார்.
அதன் பிறகு நான் அவரை வற்புறுத்தி என்னுடன் இருக்க வைத்தேன். ஆனால் அப்போது எனக்கு எதுவும் புரியவில்லை. அதன் பிறகு 2009-ஆம் ஆண்டு என் மனைவி என்னை விட்டு முற்றிலுமாக பிரிந்த பிறகு தான் நான் என்னுடைய தவறை உணர்தேன். அப்போதெல்லாம் கோகைன் பயன்படுத்தாமல் என்னால் சாப்பிட முடியாது, தூங்க முடியாது. அதே போன்ற பல பிரச்சனைகளை நான் சந்தித்தேன். என்னுடைய மனைவி இவ்வுலகை விட்டு பிரிந்த பின்னர் நான் அந்தப் பழக்கத்திலிருந்து முழுமையாக வெளிவந்தேன்.
இன்றளவும் நான் மீண்டும் அந்த போதைப்பொருள் பழக்கத்திற்கு செல்வது கிடையாது, இனியும் செல்ல மாட்டேன். என்னுடைய வாழ்நாளில் மறக்க முடியாத இழப்பு என்னுடைய மனைவி என்னை விட்டு பிரிந்தது தான். அப்படி ஒரு இழப்பிற்கு பின்னர் முற்றிலுமாக நான் அந்த போதைப்பொருள் பழக்கத்திலிருந்து வெளிவந்து விட்டேன். என்னுடைய வாழ்வில் நடந்த அந்த இருண்ட பக்கங்களையும் நான் உங்களுக்கு வெளிகாட்டுவது ஏனெனில் போதைப் பழக்கத்தினால் என்னென்ன விளைவுகள் இருக்கும் என்பதற்கு நானும் ஒரு உதாரணம் என்பதனால் தான் இதனை வெளிப்படுத்தி உள்ளேன் என வாசிம் அக்ரம் குறிப்பிட்டுள்ளார்.
Comments
Post a Comment