சமுர்த்தி சிப்தொற புலமை பரிசில் பெற்ற கிஷோபன் மட்டக்களப்பில் கல்வி சாதனை.......
கொம்மாதுறை கிழக்கு சமுர்த்தி பயனுகரி சண்முகம் லோகிதன் அவர்களின் புதல்வன் லோகிதன் கிஷோபன் தன் வறுமை நிலையினையும் கருத்தில் கொள்ளாது, உயர்தரத்திலே கல்விச்சாதனை படைத்துள்ளார். இவர் கணித விஞ்ஞானப் பிரிவில் கல்வி கற்று பொறியியல் துறையில் அகில இலங்கை ரீதியில் நான்காம் (4) இடத்தினையும், மாவட்ட மட்டத்தில் முதலாம் (1) இடத்தினையும் பெற்று கிழக்கு மாகாணத்திற்கும், மட்டக்களப்பு மாவட்டத்திற்கும், கல்குடா கல்வி வலயம், செங்கலடி மத்திய கல்லூரி தேசிய பாடசாலைக்கும் பெருமை சேர்த்துள்ளார். அத்துடன் அவரது பெற்றோர், ஆசிரியர்களுக்கும், கொம்மாதுறை கிராமத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
தன் வறுமை நிலையினையும் கருத்தில் கொள்ளாது, கல்வியே தன் மூச்சு எனும் தார்மீக மந்திரத்திலும், தன் பெற்றோர்களின் அர்பணிப்பை கருத்தில் கொண்டும் இன்று அவர் ஒரு வரலாற்று சான்றை படைத்துள்ளார்.
இவர் ஒரு சாதாரன வறிய குடும்பத்தின் ஊடாக கல்வி கற்ற ஒரு சமுர்த்தி பயன்பெறும் குடும்பத்தின் ஆளுமை மிக்க மாணவன் ஆவார், இவர் உயர் கல்வி கற்பதற்காக இவருக்கு சமுர்த்தி திணைக்களத்தின் ஊடாக சிப்தொற புலமை பரிசில் வழங்கியதை சமுர்த்தி திணைக்களம் இவ்விடத்தில் பெருமையாக பதிவிட்டுக் கொள்கின்றது.
இவரை கௌரவிக்கும் முகமாக (22)ம் திகதியன்று கொம்மாதுறை கிழக்கு சமுர்த்தி சமுதாய அமைப்புக்கள் நிகழ்வொன்றை நடத்தியிருந்தது. இதன் போது சமுர்த்தி சமுதாய அமைப்புக்கள் மூலம் நிதி சேகரிக்கப்பட்டு 30000/= ரூபாய் சமுர்த்தி வங்கியில் வைப்பில் இடப்பட்டு வங்கி புத்தகம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் ஏறாவூர் பற்று பிரதேச செயலக சமுர்த்தி தலைமையக முகாமையாளர் செ.இராசலிங்கம், மாவடிவேம்பு சமுர்த்தி வங்கி முகாமையாளர் ஜெ.சுதர்ஷினி, கொம்மாதுறை கிழக்கு சமுர்த்தி உத்தியோகத்தர் சி.பாஸ்கரதேவி, சமுர்த்தி சமுதாய அடிப்டை உறுப்பினர்கள் மற்றும் பயனாளிகள் என பலரும். கலந்து கொண்டனர்.
லோகிதன் கிஷோபன் அவர்களுக்கு கொம்மாதுறை கிழக்கு சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புக்கள், மாவடிவேம்பு சமுர்த்தி வங்கி, ஏறாவூர் பற்று பிரதேச செயலக சமுர்த்தி பிரிவு, மாவட்ட செயலக சமுர்த்தி பிரிவு வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கின்றது.
Comments
Post a Comment