சமுர்த்தி சமூக அபிவிருத்தி பிரிவு மற்றும் RCBOக்களுக்கான முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம்.......

 சமுர்த்தி சமூக அபிவிருத்தி பிரிவு மற்றும் RCBOக்களுக்கா முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம்.......

மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி திணைக்களத்தின் ஏற்பாட்டில்  மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள சகல பிரதேச செயலாளர் பிரிவுகளில் இயங்கும் சமூக அபிவிருத்தி பிரிவிற்கும், சமுதாய அடிப்படை அமைப்புக்களுக்கான காலாண்டு முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் S.புவனேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

 இதன் போது உரையாற்றிய சமுர்த்தி பணிப்பாளர் அவர்கள் சமூக அபிவிருத்தி வேலைத்திட்டத்தில் தற்போது மிக முக்கியமாக கவணிக்கப்பட வேண்டிய விடயமாக போதைப்பொருள் பாவனை இருப்பதாக குறிப்பிட்டு, தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் இப்போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்தார். அத்தோடு பாடசாலைகளில் இருந்து இடைவிலகிய மாணவர்களில் கூடிய கவனத்தை செலுத்தமாறும் கேட்டுக் கொண்டதுடன், சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புக்களில் செயற்படும் தலைவர்கள், செயலாளர்கள் எது வித எதிர்பார்ப்புக்களும் இல்லாமல் செயற்படுவதாகவும் அதற்காக தாம்  பாராட்டுவதாகவும் குறிப்பிட்டார்.

தொடர்ந்து காலாண்டுக்கான மீளாய்வுகள் பற்றி காலந்துரையாடப்பட்டன, சர்வதேச வறுமை ஒழிப்பு வேலைத்திட்டத்தின் ஊடாக செயற்படுத்தப்பட்ட முன்பள்ளி பாடசாலைகளுக்கான போசனை உணவு வழங்கள் தொடர்பாகவும், லொட்றி சீட்டிலுப்பு மூலம் திறந்து வைக்கப்பட்ட வீடுகள் பற்றியும் கலந்துரையாடப்பட்டன. இதில் முன் பள்ளி பாடசாலைகளுக்காக மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் முன் வந்து சிறார்களுக்கான போசனை உணவுகளை தாமாக வழங்கியதற்காக பாராட்டும் தெரிவிக்கப்பட்டது. தொடந்து கலந்துரையாடிய போது சிசுதிரிய புலமை பரிசில், 5ம் ஆண்டு புலமைப்பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான முன்னோடி கருத்தரங்கு மற்றும் ஜப்பான் மொழிக்கான கருத்தரங்கு பற்றியும் கலந்துரையாடப்பட்டன. இதன் போது கோரளைப்பற்று மத்தி சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் சிறப்பாக செயற்படுவதாக பாராட்டும் தெரிவிக்கப்பட்டது.

 சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புக்கள் பற்றிய கலந்துரையாடலில், அலுவலகம் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன், மிக முக்கியமாக அறனெலு கடன் பற்றியும் கலந்துரையாடப்பட்டது. இக்கடனானது தற்போது 10000 ரூபாயில் இருந்து 20000 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் இதற்கான வட்டி வீதம் 18  எனவும் அறிவுறுத்தப்பட்டது. மக்களின் அன்றாட தேவைக்காக சமுதாய அடிப்படை அமைப்புக்களின் ஊடாக மிக விரைவாக இக்கடனை சமுர்த்தி பயனுகரி பெற முடியும் எனவும், இதற்காக சமுதாய அடிப்படை அமைப்புக்கள் சமுர்த்தி வங்கி ஊடாக மூன்று லட்சம் கடன் பெற முடியும் எனவும் சுட்டிக்காட்ப்பட்டது.

இம் முன்னேற்ற மீளாய்வு கூட்டத்தில் சமுர்த்தி முகாமைத்துவ பணிப்பாளர்கள், சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுதாய அடிப்படை அமைப்புக்களுக்கு பொறுப்பான அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுதாய அடிப்படை அமைப்புக்களின் தலைவர்கள், செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

இவர்களுக்கான முன்னேற்றத்திற்கான விடயங்களை மாவட்ட சமுர்த்தி சமூக அபிவிருத்தி பிரிவுக்கு பொறுப்பான முகாமையாளர் K.புவிதரன் அவர்களும், மாவட்ட சமுர்த்தி பிரிவின் சமுதாய அடிப்படை அமைப்புக்களுக்கு பொறுப்பான முகாமையாளர் க.பகீரதன் அவர்களும் வழங்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

 இந்நிகழ்வில் மாவட்ட சமுர்த்தி சிரேஸ்ட முகாமையாளர் J.F.மனோகிதராஜ் அவர்களும் கலந்து கொண்டார்.











Comments