இணைந்த கரங்கள் அமைப்பால் மற்றுமொரு உதவிக்கரம்......
இணைந்த கரங்கள் அமைப்பினால் மட்/கமு/கட்டு முறிவுக்குளம் அ.த.க .டசாலையில் கல்வி கற்கும் 163 மாணவர்களுக்கு கற்றல் உபகரணம் வழங்கும் நிகழ்வானது, அன்மையில் பாடசாலையின் ஆசிரியர் எஸ்.சத்தியசீலன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
வாகரை பிரதேசத்தின் பிரதான பாதையில் இருந்து காட்டுப்பாதையில் உள்ளே 20KM தொலைவில் உள்ள இந்த பாடசாலைக்கு தினமும் சென்று ஆசிரியர்கள் சிரமப்பட்டு கல்வி கற்றுக் கொடுக்கின்றனர்.
பேருந்து ஒரு நாளில் ஒரு தடவை மாத்திரமே இப் பிரதேசத்திற்கு வந்து செல்கின்றது, அதே வேளை வருகின்ற பாதையும் வாகனம் செல்ல முடியாத நிலையில் காணப்படுவதுடன், இக் கிராமத்தில் வாழும் மக்களின் பிரதான தொழிலாக விவசாயம் மற்றும் கூலித்தொழிலையே இம்மக்கள் நம்பி வாழ்ந்து வருகின்றனர்.
இப்பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு பிரத்தியோக வகுப்புகள் கூட இடம்பெறுவதில்லை, இருந்த போதிலும் மாணவர்களுக்கு பாடசாலை ஆசிரியர்கள் மூலம் பிரத்தியோக வகுப்புகள் மட்டுமே இப்பாடசாலையின் ஆசிரியர்களினால் நடார்த்தப்படுகிறது. மேலும் கற்றல் உபகரணம் வழங்கும் இன் நிகழ்வில் பாடசாலை அபிவிருத்தி சங்க செயலாளர் வி.லிங்கேஸ்வரன், பல்கலைக்கழக மாணவிகள், பாடசாலை மாணவர்கள், பெற்றோர்கள், இணைந்த கரங்கள் உறுப்பினர்களான லோ.கஜரூபன், எஸ்.காந்தன், கி.சங்கீத், சி.தனோஜன், சி.துலக்சன், மா.ஜெகனாதன், நா.சனாதனன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இப்பணிக்கு முழுதான நிதிப் பங்களிப்பை இணைந்த கரங்கள் உறுப்பினர்களான தர்சன் சௌந்தராஜன், அழகரெட்ணம் ராஜரெட்ணம் ஆகியோர் வழங்கியுள்ளனர். இப்பணி மாணவச் செல்வங்களின் இடை விடாது அவர்களது பயணத்தின் நோக்கத்தையும் வலியையும் உணர்ந்து இணைந்த கரங்கள் அமைப்பின் உறுப்பினர்களும் இணைந்து உதவி வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment