கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபையினால் விழிப்புணர்வு கருத்தரங்கு!!

 கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபையினால் விழிப்புணர்வு கருத்தரங்கு!!

கடல்சார் சுழல் பாதுகாப்பு அதிகாரசபையினால் கடலில் எண்ணெய் கலப்பதை தவிர்ப்பதையும், கடல்வளத்தை பாதுகாப்பது தொடர்பான ஒரு நாள் விழிப்புணர்வு செயலமர்வு கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் மட்டக்களப்பு மாவட்ட அதிகாரி ரி.தயாரூபன் தலைமையில் (30) திகதி கல்லடியிலுள்ள தனியார் விடுதியில் இடம் பெற்றது.
சர்வதேச கப்பல் வழிப்பாதையில் எமது நாடு அமைந்திருப்பதனால் எண்ணெய் கசிவு எற்படுவதையும் இவ்வாரான பாதிப்பை குறைப்பது தொடர்பாக மேற்கொள்ளும் நடவடிக்கைகள் தொடர்பான விளக்கம் அளிக்கப்பட்டது.
மனித தவறினால் அதிகளவு எண்ணெய் கடலில் கலப்பதனால் கடல்வாழ் உயிரினங்களின் பல்வகைமை அழிக்கப்படுவதன் மூலம் இதன் பாதிப்பு பல வருடங்களுக்கு நீடிக்கின்றது.
கடந்த காலங்களில் எமது கடற்பரப்பில் மூழ்கிய கப்பல்களினால் அதிகளவு பாதிப்பை எமது நாடு எதிர்நோக்கியது.
நீரின் மேற்பரப்பில் எண்ணெய் படிவுகளினால் அதிக நச்சுத்தன்மை கொண்ட நிலநிற அல்காக்கல் உருவாகின்றது. இவ்வாறே நீரின் மேற்பரப்பில் எண்ணெய் படிவுகள் படிவதனால் சூரிய ஒளி உட்புகாது கடற்தாவரங்கள் அழிவடைகின்றது, உலகிற்கு அதிகளவு ஒட்சிசனை உற்பத்தி செய்து தருவது கடல் தாவரங்களே ஆகும். கடல் தாவரங்கள் அழிவடையும் போது உலகம் வெப்பமடைகின்றது. கடல் வளத்தினை பாதுகாப்பது அனைவரினதும் கடமையாகும்.
இச் செயலமர்வில் பங்குபற்றியவர்கள் கடல்வளத்தை பாதுகாக்க கடுமையான சட்டங்கள் இயற்றப்பட வேண்டும் என கேட்டுக்கொண்டனர். இவ் நிகழ்வின் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சினி ஸ்ரீகாந்த் கலந்து கொண்டார்.
இந் நிகழ்வின் வளவாளராக கிழக்கு பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர் Dr.எஸ்.சதாநந்தன் மற்றும் Dr.ராஜேந்திரம் மற்றும் கடல்சார் சூழல் பாதுகப்பு அதிகாரசபையின் உதவி முகாமையாளர் அமரநாயக்க, உதவி முகாமையாளர் நில்பிரியதர்சன, மற்றும் வட கிழக்கு பிரதேசத்துக்கு பொறுப்பான உதவி முகாமையாளர் ஸ்ரீபதி பங்குபற்றியிருந்ததுடன். அரச நிறுவன தலைவர்கள், உள்ளுராட்சி மன்ற அதிகாரிகள், முப்படையினர் என பல உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.









Comments