டெங்கு நுளம்பை கட்டுப்படுத்த சிரமதான பணி......
சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஒரு முக்கிய செயற்பாடு தான் சிரமதான பணியாகும். இதன் அடிப்படையில் காகிதநகர் கிராம உத்தியோகத்தர் பிரிவில் சமுர்த்தி சமதாய அடிப்படை அமைப்புக்களின் ஒருங்கிணைந்த கிராம அபிவிருத்தித் வேலைத்திட்டத்தின் கீழ் இன்று (18) காலை டெங்கு நுளம்பு பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் அல் அமீன் வித்தியாலய மற்றும் மில்லத் வித்தியாலய வளாகங்கள் சிரமதான பணிகள் மேற் கொள்ளப்படுகின்றது. தற்போது அடை மழை காரனமாக நீர் தேங்கி நிற்கும் இடங்களை கண்டு அவற்றை சுத்தம் செய்வதுடன், வளாகத்தில் காணப்படும் நீர் தேங்கும் பொருட்களும் அகற்றப்பட்டும் வருகின்றன.
இந்நிகழ்வானது கோரனைப்பற்று மேற்கு பிரதேச செயலக சமுர்த்தி சமூக அபிவிருத்தித் உத்தியோகத்தர் எம். என்.எம்.சாஜஹான் அவர்களின் மேற்பார்வையில் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ். காண்டீபன் அவர்களின் ஒழுங்கு படுத்தலில் செய்யப்படுவது குறிப்பிடத்தக்க விடமாகும்.
Comments
Post a Comment