மட்டக்களப்பு மாவட்டத்திற்கு யூரியா உரம் கையளிப்பு...........
விவசாய அமைச்சினால் இலங்கை லக்போஹெர நிலையத்திற்கு வழங்கப்பட்டுள்ள யூரியா உரத்தில் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வழங்கப்பட்ட 3434 மெட்ரிக் தொன் யூரியா உரத்தினை மாவட்ட அரசாங்க அதிபரிடம் கையளிக்கும் நிகழ்வு மட்டக்களப்பு லக்போஹெர களஞ்சிய சாலையில் இடம்பெற்றது.
இலங்கை அரசாங்கத்தினால் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு முதல் கட்டமாக வழங்கப்பட 1943 மெட்ரிக் தொன் யூரியா உரத்தினை தொடர்ந்து இரண்டாம் கட்டமாக வழங்கப்பட்டுள்ள 3434 மெட்ரிக் தொன் யூரியா உரம் மற்றும் விவசாய கிருமிநாசினி ஆகியன இன்று மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரனிடன் கையளிக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயத்தை மேற்கொண்டுள்ள விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர உட்பட இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாளேந்திரன் ஆகியோரினால் மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரனிடன் கையளிக்கப்பட்டது.
இலங்கை லக்போஹெர நிலையத்தின் கிழக்குமாகாண பிராந்திய முகாமையாளர் கே.விமலன் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்வில் மாவட்ட விவசாய பிரதி பணிப்பாளர் வி.பேரின்பராஜா, மாவட்ட கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர் கே.ஜெகநாத், தேசிய உர செயலகத்தின் மாவட்ட பிரதிப்பணிப்பாளர் கே.எல்.எம்.சிராஜீன் உட்பட இலங்கை உர நிலையத்தின் கிழக்கு மாகாண உத்தியோகத்தர்கள், திணைக்கள அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment