அவுஸ்திரேலியா தூதரக பொலீஸ் அத்தியட்சகர், தூதரக அதிகாரிகள் குழு மட்டக்களப்பு வருகை............

 அவுஸ்திரேலியா தூதரக பொலீஸ் அத்தியட்சகர்,  தூதரக அதிகாரிகள் குழு  மட்டக்களப்பு  வருகை............

அவுஸ்திரேலியா தூதரகத்தைச் சேர்ந்த சிரேஸ்ட பொலீஸ் அத்தியட்சகர் மற்றும் தூதரக அதிகாரிகள் குழு (29) மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்திற்கு வருகை தந்து சட்டவிரோத பும்பெயர்வு தொடர்பான விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது சட்டவிரோதமாக ஆஸ்திரேலியாவுக்கு படகு மூலம் செல்லும் நபர்கள் தொடர்பில் விசேடமாக கவனம் செலுத்தப்பட்டு கலந்துரையாடியுள்ளனர்.
அதன் பின்னர் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த குறிப்பிட்ட சில ஊடகவியலாளர்களுடன் சந்திப்பு ஒன்றினை ஏற்படுத்தி சட்ட விரோதமாக ஆவுஸ்திரேலியா செல்லும் நபர்கள் தொடர்பிலும், அது தொடர்பில் ஊடகங்களின் செயற்பாடுகள் தொடர்பிலும், சட்ட விரோதமாக செல்லும் நபர்களின் நடைமுறைகள் எவ்வாறு ஆவுஸ்திரேலியா அரசாங்கத்தினால் கையாளப்படும் என்பது தொடர்பிலும் கலந்துரையாடினர்.
இதன் போது இலங்கைக்கான அவுஸ்திரேலிய சிரேஸ்ட பொலீஸ் அத்தியட்சகர் Robert Wilson, Media officer Michael Ryan, Civilization officer Mathews Fallen, மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட் பொலிஸ் அத்தியட்சகர் சுகதபால, மட்டக்களப்பு மாவட்ட பொலீஸ் அத்தியட்சகர் எல். ஆர். குமாரசிறி, மட்டக்களப்பு பொலிஸ் தலைமையக பதில் பொறுப்பதிகாரி எம். ஐ. உவைஸ் மற்றும் காத்தான்குடி பொலிஸ் பொறுப்பதிகாரி நாயனசிறி ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
அத்தோடு குறித்த குழுவினர் ஈஸ்டர் குண்டு தாக்குதலிற்குள்ளான சீயோன் தேவாலயத்தையும் பார்வையிட்டிருந்தனர்.





Comments