மாவட்ட சமூக சேவை அலுவலகத்திற்கான காணி கையளிக்கப்பட்டது...........

 மாவட்ட சமூக சேவை அலுவலகத்திற்கான காணி கையளிக்கப்பட்டது...........



கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் கீழ் இயங்கிவரும் மட்டக்களப்பு மாவட்ட சமூக சேவை அலுவலகத்திற்கான காணி (01) அன்று மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரதேச செயலாளர் V.வாசுதேவன் அவர்களால் சமூக சேவைகள் திணைக்கள மாகாண பணிப்பாளர் A.G.தெய்வேந்திரன் அவர்களிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது. 

இந்நிகழ்வில் மண்முனை வடக்கு உதவி பிரதேச செயலாளர்களான  P..லக்ஷனியா, M.R.சியாகஹீல்ஹக் மற்றும் தலைமையக சமூக சேவை உத்தியோகத்தர், மட்டக்களப்பு மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர், மண்முனை வடக்கு சமூக சேவை உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.

Comments