மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு சுகாதார அமைச்சினால் நோயாளர் காவு வண்டி வழங்கிவைப்பு......
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு நோயாளர் காவு வண்டியொன்று சுகாதார அமைச்சினால் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டி பற்றாக்குறை நிலவி வந்த நிலையில் நோயாளர்களை மாற்று வைத்தியசாலைகளுக்கு கொண்டு செல்வதில் ஏற்பட்டு வந்த அசௌகரியத்தை குறைக்கும் பொருட்டு சுகாதார அமைச்சினால் நோயாளர் காவு வண்டியொன்று மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பயன்பாட்டிற்காக வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கிடைக்கப்பெற்றுள்ள நோயாளர் காவு வண்டியை பயன்பாட்டிற்காக இன்றைய தினம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி கே.கலாரஞ்ஜினி கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்துள்ளதுடன், இதன்போது போதனா வைத்தியசாலையின் உயரதிகாரிகள் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
Comments
Post a Comment