மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர்களுக்கான பயிற்சிப்பட்டறையின் மூன்றாவது தொகுதியினருக்கான அங்குரார்ப்பண நிகழ்வு.........

 மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர்களுக்கான பயிற்சிப்பட்டறையின் மூன்றாவது தொகுதியினருக்கான அங்குரார்ப்பண நிகழ்வு.........

மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு மனிதாபிமானப் பணிகளை மேற்கொண்டு வரும் LIFT நிறுவனத்தினால் மட்டக்களப்பில் ஆரம்பிக்கப்பட்டுள்ள சமூக மேம்பாட்டில் அக்கறையுள்ள ஊடகவியலாளர்களுக்கான மூன்றாம் கட்ட பயிற்சி முகாம் (25) திகதி கல்லடியில் உள்ள தனியார் விடுதியில் ஆரம்பிக்கப்பட்டது.
GCERF மற்றும் HELVETAS நிறுவனங்களின் நிதி அனுசரணையில் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள ஊடகவியலாளர்களை பயிற்றுவித்து அவர்கள் மூலம் இளைஞர்கள் மத்தியில் பரப்பப்படும் வன்முறைத்தீவிரவாத எண்ணங்கள், சமூக ஊடகங்களின் பிழையான பயன்பாடுகளை குறைத்தல் போன்றவற்றை முன்னெடுக்கும் வேலைத்திட்டம் மூன்றாம் கட்டமாக ஆரம்பிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கிழக்கு பல்கலைக்கழக சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவக பணிப்பாளர் கலாநிதி புளோரன்சா பாரதி கெனடி, வந்தாறுமுலை தொழில்நுட்ப கல்லூரியின் பிரதிப்பணிப்பாளர் ஏ.கனகசுந்தரம், HELVETAS நிறுவனத்தின் திட்ட உத்தியோகத்தர் ரமேஷ் நஷார், மட்டக்களப்பு மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் ஒருங்கிணைப்பாளர் U.S.M.ரிஸ்வி, மட்டக்களப்பு மாவட்ட தகவல் பொறுப்பதிகாரி வ.ஜீவானந்தம், மனிதநேய தகவல் குறிப்பு (மதகு ஊடகம்) பணிப்பாளர் சபை உறுப்பினர் எந்திரி Y.கோபிநாத், LIFT நிறுவன நிறைவேற்றுப் பணிப்பாளர் ஜானு முரளிதரன், பெண் மனித உரிமை செயற்பாட்டாளரும் பயிற்றுவிப்பாளருமான நளினி ரெட்ணராஜா மற்றும் LIFT நிறுவன உத்தியோகத்தர்கள், ஊடகவியலாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சமூக மேம்பாட்டில் அக்கறையுள்ள ஊடகவியலாளர்களுக்கான மூன்றாம் கட்ட பயிற்சியானது 28 ஊடகவியலாளர்களுடன் ஆரம்பிக்கப்பட்டது. இப் பயிற்சியானது மொத்தமாக 60 ஊடகவியலாளர்களுக்கு வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இளைஞர் யுவதிகளுக்கு சமூக ஊடகங்களின் சரியான பயன்பாடு, ஊடக தர்மம், ஊடக நெறிமுறைகள் ஊடக சட்டங்கள் போன்ற பல்வேறு விடயங்களைத் தெளிவுபடுத்தும் பயிற்சி வகுப்புக்கள், செயலமர்வுகள் என்பன LIFT நிறுவனத்தினால் நடாத்தப்படவுள்ளன.






Comments