சிறப்பாக இடம்பெற்ற காத்தான்குடி சுயாதீன ஊடகவியலாளர் போரத்தின் கெளரவிப்பு நிகழ்வு..

 சிறப்பாக இடம்பெற்ற காத்தான்குடி சுயாதீன ஊடகவியலாளர் போரத்தின் கெளரவிப்பு நிகழ்வு......

(எம்.பஹத் ஜுனைட்)

காத்தான்குடி சுயாதீன ஊடகவியலாளர் போரத்தின் ஏற்பாட்டில் சுமார் நாற்பது வருடகாலமாக துவிச்சக்கர வண்டி மூலம் பத்திரிக்கை விநியோகம் செய்து வரும் எஸ்.எம்.ஆதம்லெப்பை அவர்களின் அர்பணிப்புடனான சேவையை பாராட்டியும், க.பொ.த உயர்தரத்தில் ஊடகத்தை ஒரு பாடமாக எடுத்து கலைத்துறையில் மாவட்ட மட்டத்தில் முதலாம் இடத்தை பெற்ற எஸ்.ஏ.பாத்திமா சம்லா ஆகியோரை கெளரவிக்கும் நிகழ்வு  (05) காத்தான்குடி பீச் மூன்வெள்ளி மண்டபத்தில் இடம்பெற்றது.

சுயாதீன ஊடகவியலாளர் போரத்தின் தலைவர் ஊடகவியலாளர் ஜெலீஸ் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் விடிவெள்ளி பத்திரிகை ஆசிரியர் பி.எம்.பைறூஸ் மற்றும் காத்தான்குடி தள வைத்தியசாலையின் வைத்திய அதியட்சகர் டாக்டர் எம்.எஸ்.எம்.ஜாபிர் ஆகியோர் அதிதிகளாக கலந்து கொண்டு கெளரவங்களை வழங்கியதுடன் போரத்தின் உறுப்பினர்களுக்கான நினைவு சின்னம் மற்றும் மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் என்பவற்றை வழங்கி வைத்தனர்.

இந் நிகழ்வில் பிரபல தொழிலதிபரும் சமூக ஆர்வலருமான கே.எல்.கலீல் மற்றும் அவதானி ஊடகத்தின் பணிப்பாளர் மதியன்பன் மஜீத் உள்ளிட்ட ஊடகவியலாளர்கள் மற்றும் பிரமுகர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.









Comments