ஓட்டமாவடி சிராஜ் எக்ஸலண்ட் கல்லூரி ஏற்பாட்டில் புலமைப்பரிசில் பரீட்சைக் கருத்தரங்கு!!
ஓட்டமாவடி சிராஜ் எக்ஸலண்ட் கல்லூரி ஏற்பாட்டில் இம்முறை தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்கான கருத்தரங்கு கல்லூரியின் பிரதான மண்டபத்தில் கடந்த (14) திகதி இடம்பெற்றது.
கல்லூரியின் பணிப்பாளர் எம்.எம்.நவாசின் ஆலோசனையின் பேரில் கல்லூரி முதல்வர் எம்.றஹீஸ் நளீமி தலைமையில் இடம்பெற்ற இக்கருத்தரங்கில் சுமார் 450க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
இக்கருத்தரங்கில் நேத்ரா ரீவி, இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் ஆகியவற்றில் விரிவுரைகளை மேற்கொண்டு வரும் ஐ.எல்.எம்.ஷபான் வளவாளராகக் கலந்து கொண்டார்.
கருத்தரங்கில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு உடனடிப்பரீட்சை நடாத்தப்பட்டு, அதி கூடிய புள்ளிகளைப்பெற்ற மாணவர்களுக்கு கல்லூரியின் பணிப்பாளர், முதல்வரால் பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment