கிழக்கு மாகாண ஆளுனரால் மாணவர்களின் பெற்றோருக்கு உதவிகள் வழங்கிவைப்பு...
செங்கலடி மட்/ககு/குமாரவேளியார் கிராமம் சித்தி விநாயகர் வித்தியாலயத்திற்கு கிழக்கு மாகாண ஆளுனர் அநுராதா யஹம்பத் விஜயமொன்றினை மேற்கொண்டுள்ளார்.
பாடசாலைக்கு வருகை தந்த கிழக்கு மாகாண ஆளுனர் அநுராதா யஹம்பத் சீனா அரசாங்கத்தின் உதவித்திட்டத்தினால் வழங்கிய அரிசி பொதிகளை மாணவர்களின் பெற்றோர்களிடம் கையளித்துள்ளார்.
பாடசாலை அதிபர் திருமதி.சசிகலா அவர்களிடம் ஆளுனரிடம் பாடசாலையில் நிலவும் குறைபாடுகளை பற்றி கேட்டு அறிந்து கொண்டதுடன், எதிர்காலத்தில் போதுமான அபிவிருத்திகளை செய்து தருவதாக வாக்கு உறுதியும் அளித்துளார்.
இந்நிகழ்வில் செங்கலடி பிரதேச சபையின் உறுப்பினர் வ.சுரேந்திரன் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment