முதல் ஒருநாள் விக்கெட்டினை வீழ்த்திய அவுஸ்திரேலிய வீரர் ஆலன் தாம்சன்காலமாணார்...

 முதல் ஒருநாள் விக்கெட்டினை வீழ்த்திய அவுஸ்திரேலிய வீரர் ஆலன் தாம்சன்காலமாணார்...



உலகின் முதல் ஒரு நாள் ஆட்டத்தில் முதல் விக்கெட்டினை வீழ்த்திய ஆவுஸ்திரேலிய வீரர் ஆலன் தாம்சன்  தனது 76வது வயதில் காலமானார்.

இவர் 04 டெஸ்ட் போட்டிகளிலும் ஒரே ஒரு ஒரு நாள் போட்டியிலும் விளையாடி அந்த ஒரு நாள் போட்டியில் ஒரே ஒரு விக்கெட்டினை கைப்பற்றி இச்சாதனையை புரிந்துள்ளார்.

1970-71ல் 07 டெஸ்ட் போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் முதலில் இரு டெஸ்டுகளிலும் பிறகு 5ம் 6ம் டெஸ்டகளிலும் இவர் விளையாடினார். இத்தொடரில் 3வது டெஸ்ட் மெல்பேர்னில் நடைபெறுவதாக இருந்தது.ஆனால் மழை காரணமாக கைவிடப்பட்டது. இதனால் ஜனவரி 5 அன்று அதே மெல்பேர்னில் ஒரு நாள் ஆட்டத்தை அவுஸ்திரேலியா அணியும் இங்கிலாந்து அணியும் மோதிக் கொண்டன. அதுவே உலகின் முதல் ஒருநாள் கிரிக்கெட் ஆட்டமாகி பதிவாகியும் உள்ளது. அப்போட்டியில் அவுஸ்திரேலியா அணிக்காக விளையாடிய தாம்சன் இங்கிலாந்து வீரர் பாய்காட்டின் விக்கெட்டினை கைப்பற்றி முதல் ஒரு நாள் போட்டியில் முதல் விக்கெட்டினை கைப்பற்றிய வீரர் ஆனார். இதனால் வரலாற்று புத்தகத்தில் இடம்பிடித்தார். 40 ஓவர்களாக நடாத்தப்பட்ட இப்போட்டியில் 08 ஓவர்கள் பந்து வீசி 22 ஓட்டங்களை கொடுத்து 01 விக்கெட்டினை கைப்பற்றி இருந்தார். இதற்கு பின்பு தாம்சன் ஒரு நாள் போட்டிகளில் விளையாடவே இல்லை. 44 முதல் தர போட்டிகளில் விளையாடி 184 விக்கெட்டுக்களை கைப்பற்றியுள்ளார்.


Comments