'எல்லைகளைக் கடந்த இளைஞர்கள்' வழிகாட்டல் செயலமர்வு.......
மட்டக்களப்பு காவியா பெண்கள் அபிவிருத்தி நிறுவனம் கெல்விடாஸ் மற்றும் இளைஞர் அபிவிருத்தி திணைக்களத்துடன் இணைந்து இளைஞர்களுக்காக நடாத்துகின்ற 'எல்லைகளைக் கடந்த இளைஞர்கள்' எனும் நிகழ்ச்சி திட்டத்தின் இளைஞர் யுவதிகளுக்கான தொழில் சந்தை மற்றும் தொழில் கல்வி வழிகாட்டல் இரண்டு நாள் நிகழ்வு மட்டக்களப்பில் நடைபெறுகின்றது
மட்டக்களப்பு காவியா பெண்கள் அபிவிருத்தி நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் அஜித்குமார் யோகமலர் தலைமையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அரச அரசசார்பற்ற மற்றும் தனியார் துறைகளை சார்ந்த கல்வி நிறுவனங்களுடன் இணைந்து இரண்டு நாட்கள் மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் நடாத்தப்படுகின்ற இளைஞர், யுவதிகளுக்கான தொழில் சந்தை மற்றும் தொழில்கல்வி வழிகாட்டல் நிகழ்வில் காவியா பெண்கள் அபிவிருத்தி நிறுவன உத்தியோகத்தர்கள், இளைஞர், யுவதிகள் கலந்துகொண்டனர்.
காவியா பெண்கள் அபிவிருத்தி நிறுவனம் மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுத்து வரும் சமூக பொருளாதார அபிவிருத்தி, வறுமை ஒழிப்பு, பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களின் வாழ்வாதாரம் போன்ற திட்டத்தின் இளைஞர், யுவதிகளை ஒன்றிணைத்து தலைமைத்துவதுடன் சமூக பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கான திட்டமாக 'எல்லைகளைக்கடந்த இளைஞர்கள்' எனும் நிகழ்ச்சி திட்டம் ஆரம்பிக்கப்பட்டு இளைஞர், யுவதிகளின் திறன் அபிவிருத்தி செயல்பாட்டின் தொழில் சந்தை மற்றும் தொழில்கல்வி வழிகாட்டல்களை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment